பக்கம்:திருக்குறள் உரை.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 997.அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர். அரத்தைப்போன்ற கூர்த்த புத்தியுடையவராயினும் மக்கட் பண்பில்லாதவர் மரத்தினை ஒப்பர். o அரம் இரும்பை அரித்து அழிப்பது போலக் கூர்த்த மதியுடையார் பண்பாடு பெறாது ஒழியின் தம்மைச் சார்ந்தாருக்குப் புத்திக் கூர்மையினால் தீமையே செய்வர். 997. 998. நண்புஆற்றார் ஆகி நயம்இல செய்வார்க்கும் பண்புஆற்றார் ஆதல் கடை. தம்மிடம் நட்புப்பாராட்டாது பகைமை செய்தொழுகுவாருக்கும் தாம் பண்புடையராக ஒழுகுதல் இல்லாதவர் கடையரே. தீமைக்குத் தீமை கடையர் கொள்கையாதலால் பகைவர் மாட்டுப் பண்பொடு பழகாதாரையும் கடை என்றார். 998. 999. நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள். ஒருவரோடொருவர் கலந்து பேசி நகைத்து மகிழ்ந்து வாழ்வதறியாருக்குப் பகலும் இருள் நிறைந்த இரவு போலவேயாம். மனமுரண்பாட்டால்-பகையால் கண்டும் காணாமலும், ஒரோவழிக் கண்டாலும் நெஞ்சொடுபட்ட சொற்கள் பேசாமலும் மகிழாமலும் வாழ்தல் இருள்நிறைந்த வாழ்க்கை என்பது உணர்த்தியது. 999. 1000. பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலம்தீமை யால்திரிந் தற்று. நல்ல பால், வைக்கப்பெற்ற பாத்திரத்தினால் கெட்டுப்போவதைப்போலப் பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம், கெட்டுப்போம். செல்வத்தின் பயன் நன்மை செய்தலே. பண்பிலான்பெற்ற செல்வம், வம்புக்கும் வழக்குக்குமாதலால் செல்வம் கெட்டது என்று என்றார். 1000 101.நன்றியில் செல்வம் நல்லவனவற்றிற்குப் பயன்படாத செல்வம் நன்றியில் செல்வம். நன்றியில் செல்வம்- செல்வமுடைமையின் குறை. செல்வத்தின் மேலும் வைத்துக் கூறப்பட்டது. ஆயினும் செல்வம் சடப்பொருளேயானாலும் கிரியா ஊக்கியாக இருக்கும் இயல்பு அதற்கு உண்டு. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 287