பக்கம்:திருக்குறள் உரை.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்டால் 100. வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள்.அஃதுஉண்ணான் செத்தான செயக்கிடந்தது இல். உண்ணாது துய்க்காது சேர்த்து வைத்த செல்வத்தைக் கொண்டு யாதொன்று செய்யமாட்டாமையினால் செத்தான் என்றே கொள்ளுதல் வேண்டும். செல்வத்தின் பயனைத் துய்க்காமையினால் செத்தான என்றார். 1001. 1002. பொருளான்.ஆம் எல்லாம்என்று ஈயாது இவறும் மருளான்.ஆம் மாணாப் பிறப்பு. கைப்பொருளால் எல்லாம் ஆம் என்று அறிந்து பெரும்பொருள் திரட்டி அங்ங்ணம் திரட்டிய பொருளைப் பிறருக்கு உதவாமல் ஆசையால் செல்வத்தை இவறிக் கூட்டிச் சேர்ப்பானாகில் மறுமையில் பேயாய்ப் பிறப்பான். பேய், தானும் வாழ்தல் இல்லை.மற்றவர்கள் வாழத்துணை செய்வதுமில்லை. 1002. 1003 ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை. பொருள் சேர்க்கும் ஆசையால், புகழை விரும்பாத ஆடவர்களின் பிறப்பு நிலத்திற்குச் சுமையே. பிறப்பின் சிறப்பு புகழேயாம். புகழற்றவர்கள் நிலத்திற்குச் சுமையே என்ற உண்மையை உணர்க. 1003. 1004. எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன். எவரும் அணுகமுடியாதவனாய்ப் பொருள் சேர்த்தவன், தான் செத்த பிறகு, தன்னுடன் வருவது எது என்று எண்ணானோ? பொருள் தொடர்வதுமன்று நிலையானதுமன்று. அறமும் புகழும் தொடரக் கூடியன; நிலைத்து நிற்பனவும் கூட! 1004. 1005. கொடுப்பது உம் துய்ப்பது உம் இல்லார்க்கு அடுக்கிய கோடிஉண் டாயினும் இல். பிறருக்குக் கொடுத்தலும், தாம் துய்த்தலும் இல்லாதவனுக்கு, கோடி அடுக்கிய செல்வம் இருப்பினும் அச்செல்வத்தால் என்ன பயன்? செல்வத்தின் பயனாகிய ஈதலையும் துய்த்தலையும் இழந்தமையின் செல்வத்தால் பயனில்லை என்றார். 1005 288 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை