பக்கம்:திருக்குறள் உரை.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 1006. ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பு இலா தான். தானும் அனுபவிக்காமலும் உதவிசெய்யத் தகுதியுடையார்க்கு உதவுதலும் ஆகிய இயல்புகள் இல்லாதவனுக்கு அவன் பெற்ற பெருஞ்செல்வம் பெருந்துன்பமேயாம். செல்வத்தைப் பிறர் கவராமல் காத்தலாகிய பெருந்துன்பம் வரும். பயன்படும் செல்வமாயின் எவரும் தமது தமது எனப் போற்றிப்பாதுகாப்பர் என்பதறிக. 1006, 1007. அற்றார்க்குஒன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றான் தமியள்முத் தற்று. வறியோருக்குக் கொடுத்து உதவாதவன் செல்வம் எழில்நலமனைத்தும் பெற்ற பெண் ஒருத்தி, தனியே வாழ்ந்து மூப்படைதலை ஒககும். பெண்ணின் எழில்நலம் திருமணம்வழி, கணவனின் அனுபவத்திற்குரியதாகி அவ்வழி மக்கட்பேறு கிட்டுகிறது. பெண்ணின் எழில்நலம், மக்கட்பேறு என்ற பயனைத் தருகிறது. அதுபோலச் செல்வத்தின்பயன் வறியோருக்கு உதவுதலும் அவ்வழி புகழ்-புத்தேள் உலகு பெறுதலும் ஆம். 1007. 1008. நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நசசு மரமபழுத தறறு. ஒருவராலும் விரும்பப்படாத செல்வம், நடுவூருள் நச்சுமரம் பழுத்தது போன்றது. நஞ்சுமரம் தம்மை நண்ணினார்க்குத் துன்பம் தருதல் போல, அணுகி உதவிகள் பெற முடியாத செல்வன் ஊராருக்குத் துன்பங்கள் விளைவிப்பான். 'நச்சப்படாதவன் செல்வம்'- உதவாமை மட்டுமன்று. சுரண்டுதலின் மூலம் செல்வம் அடைவான் தரும் துன்பமும் சேரும். 1008. 1009. அன்புஒரீஇத் தற்செற்று அறம் நோக்காது ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர். கற்றத்தாரிடம் அண்பை விலக்கியும், தான் துய்க்காமல் வருந்தியும் அறநெறியில் உதவாமலும் தேடிக் காத்து வைத்த செல்வத்தை அந்நியர் தாமே எடுத்துச் செல்வர். 'பிறர்' என்றதால் உரிமை வழியும் அறநெறிவழியும் உரிமையுடையாரல்லாத கள்வர், பகைவர் எடுத்துச் செல்வர் என்று உணர்க. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 289