பக்கம்:திருக்குறள் உரை.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் 1019. குலம்சுடும் கொள்கை பிழைப்பின் நலம்சுடும் நாண் இன்மை நின்றக் கடை கொள்கையில் பிழை செய்தால் குலம் சுடும். நாணினை நீக்கியவிடத்து நலமனைத்தும் சுடும். கொள்கையிலும் நாணம் உயர்ந்தது. 1019. 1020. நாண் அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை நானால் உயிர்மருட்டி அற்று. அகத்தே நாணம் இல்லாதார் உயிர் வாழ்தல், மரப்பாவை உயிருடையார்போல மயக்கியதாகும். நாணம் இல்லாதார் மரப்பாவையனையர். 1020. 103. குடிசெயல்வகை ஒருவன் தாண்பிறந்த குடியை வளமாக வளர்த்தல்; உயர்த்துதல். 1021. கருமம் செயஒருவன் கைதுவேன் என்னும் பெருமையில் பீடுஉடையது இல். ஒருவன் தான் பிறந்த குடியுயரக் கூடிய பணிகளைச் செய்யும்பொழுது கைப்பணி களிலிருந்து விலகாமல் தொடர்ந்து செய்யும் பெருமை பெறின் அப்பெருமையால் அவன் பிறந்த குடி பெருமைக்குரியதாகும். குடியாக்கத்திற்குரிய பணிகளைச் செய்யும்பொழுது ஒன்றிரண்டுடன் நிற்காமல் இடையில் கைகட்டாமல் தொடர்ந்து செய்தால் அவன் பிறந்த குடி பெருமை பெறும். 1021. 1022. ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள்வினையான் நீளும் குடி. ஆள்வினையுடைமையாலும் அனுபவமிக்க அறிவினாலும் தொடர்ச்சியாகச் செய்யும் பணிகளால் குடி வளரும். அறிவும் ஆள்வினையும் சேர்ந்து செயல்பட்டாலே பயன் உண்டு. பிறிதோரிடத்து “அறிவறிந்த ஆள்வினை' என்றார். உலகியலில் அறிவுடையோர் பலர். ஆள்வினையுடையாரைக் காண்பதரிது. 1022. 292 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை