பக்கம்:திருக்குறள் உரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 59. புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. புகழுக்குரியவளாக வாழ்க்கைத்துணைநலம் அமையாத வழி தலைமகனுக்கு அவனை இகழ்வார் முன் பெருமிதம் இல்லை. புகழ் புரிதல் - 56-ஆவது திருக்குறளின்படி வாழ்தல். 59. 60. மங்கலம் என்ப மனைமாட்சி மற்று.அதன் நன்கலம் நன்மக்கட் பேறு. மனைவியின் குணநலன் மனையறத்திற்கு நன்மை. நன்மக்களைப் பெறுதல் அம்மனையறத்திற்கு நல்ல அணிகலம். - நண்மக்கள் - காதலர்களின் குணச்சிறப்புக்களின் வழியில் நன்மக்கள் அமைவதாம். 7. மக்கட்பேறு இல்வாழ்க்கையின் பயன் மக்கட்பேறு. வாய்த்த வாழ்க்கைத் துணை நலத்தின் வழியிலேயே மக்கட்பேறு அமைவதால் வாழ்க்கைத்துணை நலத்தினைத் தொடர்ந்து மக்கட்பேறு கூறினார். நன்மக்களை ஈன்று புகழ் பெறுதலே இல்வாழ்க்கையின் குறிக்கோள் என்பது வள்ளுவத்தின் திரண்ட கருத்து. - அடையும் மக்கட்பேற்றினைப் பொறுத்துத்தான், இல்வாழ்வாருடைய புகழ் அமைகிறது. பயன் அமைகிறது. மக்கட் பேற்றிற்குரியதாகி மனிதகுல வரலாற்றினைத் தொடர்ந்து இயக்கப் பயன்படுவதனாலேயே இல்வாழ்க்கை அறமாயிற்று. - 61. பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்த மக்கட்பேறு அல்ல பிற இல்லறத்தான் பெறக்கூடிய பேறுகளுள், அறிவறிந்த மக்களைப் பெறுதலை விடச் சிறந்த பேறு வேறு ஒன்று இருப்பதாக நாம் அறியவில்லை. அறிவறிந்த மக்கட்பேறு - பெறக்கூடிய மக்கள் எப்படி அமைய வேண்டும் என்று எண்ணி ஒழுகிப்பெறும் மக்கள் அறிவறிந்த மக்கள். அறியக்கூடிய நூல்களை, கற்று அறியத்தக்க மக்கள் என்றும் கூறுவர். - 61. 62. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழியிறங்காப் பண்புடை மக்கள் பெறின். பழித்தற்குரியவாறு அமையாது நற்குணங்கள் உடைய குழந்தைகளைப் பெற்றால் எழுபிறப்பிலும் துன்பங்கள் வாரா. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 27