பக்கம்:திருக்குறள் உரை.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் 1041. இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது. ஒருவனுக்கு வறுமையைப் போலக் கொடுமையானது எது எனில் வறுமையைப் போலக் கொடுமையானது அவ்வறுமைதானேயாம். பிறிதொன்று b)6.)6). இ உலகில் கொடுமைகளில் கொடுமை வறுமையேயாம். வறுமை வருத்துவது போலப் பிறிதொன்று வருத்தல் இயலாது. உழைப்பு, செல்வத்தின் அருமையை உணர்த்தவே வறுமை கொடுமையாயிற்று. ஆயினும் உணர்வார் யார்? 1041. 1042. இன்மை எனஒரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும். வறுமை என்று அழைக்கப்படும் ஒரு பாவி, இம்மை, மறுமை இன்பங்கள் இல்லாமல் செய்ய வரும். வறுமை என்ற பாவி வந்தடைந்தபின்தான் இம்மையும் மறுமையும் இல்லாமல் போகிறது. ஆனால், 'மறுமையும் இம்மையும் இன்றி வரும் என்று கூறியது உறுதிப்பாட்டை நோக்கியேயாம். மறுமையை முதலில் கூறியது சிறப்பு நோக்கியே. இம்மையின் விளைவே மறுமை. 1042, 1043. தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை. ஒருவனிடத்து நல்குரவு என்னும் ஆசை வந்து பிடித்தால் அவனுடைய பழைய குடி மரபினையும் பழைய புகழினையும் ஒருமித்துக் கெடுக்கும். இன்மையைப் பொருட்படுத்தாதவர்களுக்கு வறுமையும் இல்லை. அவ்வழி துன்பமும் இல்லை. ஆதலால் , ஆசையே வறுமை என்று கூறினார். 1043. 1044. இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும். நற்குடி பிறந்தாரிடத்தும் வறுமை இகழ்ச்சிக்குரிய சோர்வினைத் தரும். நற்குடிப் பிறந்தார் வறுமையின் காரணமாகத் தனது மரபைக் காப்பாற்றிக் கொள்ள இயலாமையால் சோர்வு படுவர். 1044. 1045. நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும். வறுமை என்ற துன்பம் வரவே, அதனைத் தொடர்ந்து பல துன்பங்கள் 298 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை