பக்கம்:திருக்குறள் உரை.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் 1050. துபபுரவு இலலார துவரத துவராமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று. துய்ப்பன பெறாதாள் முற்றத் துறக்காமை மற்றவர்களுடைய உப்புக்கும் கஞ்சிக்கும் கூற்றுவராம். துய்ப்பன இல்லாதான் இரந்து வாழ்தலினும் துறத்தல் பெருமையுடையது என்றவாறாயிற்று. முற்றத் துறவாதார் ஆசை வயப்படுவர் என்றுணர்த்த “துவரத் துறவாதார்’ என்றார். துவரத் துறந்தார் பசியை வெல்வார். மற்றவர் அடுத்த விட்டில் எதிர்பார்ப்பர். 1050. 106. இரவு இரத்தல்-பிச்சை எடுத்தல் வாழ்தலுக்குரிய தேவைகளை நெறிமுறைகளுடன் அடைய முடியாதவர் பிச்சை எடுத்து வாழ நினைப்பர். இரத்தல், புகழுமன்று இழிவும் கூட வறுமையின் காரணமாக இரத்தல் நிகழும். ஆதலால் வறுமையின் பின் வைத்தார். இந்த அதிகாரம், “இரவு' என்று, தலைப்புக் கொண்டிருந்தாலும் திருக்குறள்கண் ஈவாரின் சிறப்பியல்புகளைப் பற்றியே மிகுதியும் பேசுகின்றது. 1051. இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று. இரந்து கேட்கத் தகுதியுடையாரைக் கானின் இரந்திடுக. இரந்தவர்க்கு இல்லை என்றாராயின் பழி அவருக்கே இரந்தவர்க்கன்று. 'இரத்தக்கார்க் காணின்' என்றதால் காண்பதரிது என்றஅருமை உணர்த்தினார். இரக்கத் தக்காரை இரக்கும் பொழுது அவர் ஒளித்தால் அவருக்கே பழி. இரப்பவருக்கு வராது. ஈதற்பண்புக்குச் செயலாக்கம் தருபவர் கரவாது அளிப்பவர்களிடம் இரத்தல் தவறன்று என்று உணர்த்தியவாறு. 1051, 1052. இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின். ஒருவருக்கு இரத்தல் இன்பம்! எப்போது? இரந்து கேட்டவை துன்பந்தராமல் கிடைக்குமானால் பொதுவாக, இரத்தல் துன்பம். ஆனால், துன்பமாகிய இரத்தலும் இன்பமாவது இரக்கப்படுவாரின் தகுதியைப் பொறுத்தது. 1052. 300 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை