பக்கம்:திருக்குறள் உரை.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் இரப்பாரை இகழ்தலும் அவமதித்தலும் செய்யாது கொடுத்து உதவுவாரைக் காணின் இரப்பவர் உள்ளம் உவப்பில் திளைக்கும். பொதுவாக, வறுமையால் வாடுவாரை இகழ்தலும் அவமதித்தலும் உலகியல்பாதலின் அந்த இயல்பை மறுத்து இகழ்ந்தெள்ளாது ஈதலை” வற்புறுத்தினார். * - இகழ்ந்து எள்ளலுடன் உதவினால் பயனுமில்லை; புகழுமில்லை! என்பதை உணர்த்துவது இந்தக் குறள். 1057. 1058. இரப்பாரை இல்லாயின் ஈரங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று. இரப்பார் இந்த உலகில் இல்லாமற் போயின், இந்தப் பெரிய உலகம், உயிர்ப்பற்ற மரப்பாவைக் கூத்துப் போன்றதாகும். மரப்பாவைக் கூத்து உயிர்ப்பு இல்லாதது. அதுபோல உதவுதல் - ஒத்துழைத்தல் ஆகிய மானுடத்திற்குரிய உயிர்ப்புக் குணங்கள் இல்லாத மனிதர்கள் கூட்டம் மரப்பாவை போலத்தான் என்பதுணர்த்தியது. வாழ்க்கைக்கு உயிர்ப்பு உதவுதலும் ஒத்துழைப்புமேயாம். 1058. 1059. ஈவார்கண் என்உண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை. கொடுத்து உதவுவாரிடம் இரப்பவர் சென்று கேட்காதிருப்பின் கொடுக்கும் இயல்புடையாரிடம் என்ன புகழ் இருக்க இயலும்? புகழில்லை. “இரப்பார்க்கு ஒன்று ஈவதே புகழ்' என்றுணர்த்தியது. இரப்பவர் சாதாரணப் பொருளைப் பெற்றுக் கொண்டு ஈவாருக்கும் இம்மையும் மறுமையும் அளிக்கும் புகழினை அளிப்பதை அறிந்துணர்க. 1059. 1060. இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை தானேயும் சாலும் கரி. இரந்து கேட்பவனுக்கு இரந்தது கிடைக்காதபொழுது கோபப்பட வேண்டாம். வேண்டிய பொழுது உதவி கிடைக்காது என்பதற்கு வறுமையே சான்று. - ஏமாற்றத்தின்பொழுதும் வெகுளாமை வேண்டும் என்று உணர்த்த, 'இரப்பான் வெகுளாமை வேண்டும்” என்றார். 1060. 107. இரவச்சம் _மானத்திற்கு அஞ்சி இரந்து வாழ்தலுக்கு அஞ்சுதல். உழைத்து வாழ்வதே வாழ்வு. இரந்து வாழ்தல் உயர்வன்று என்று விளக்கும் அதிகாரம். 302 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை