பக்கம்:திருக்குறள் உரை.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 1061. கரவாது உவந்து ஈயும் கண்அன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும். தம்மிடம் உள்ளதை ஒளிக்காது கொடுக்கும் கண் போன்று உரிமை உடையோரிடத்தும் இரந்து கேட்காமல் இருப்பது கோடி இன்பம் தரும். இரத்தலால் பெற முடியும் என்ற நம்பிக்கை இருப்பின் இரத்தல் நன்று என்று முன் சொன்னதை மறுக்கின்றார். பொதுவாக, இரத்தல் கூடாது என்பதே திருக்குறள் முடிவு. 1061. 1062. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான். இரந்து தான் உயிர் வாழ்தல் வேண்டும் என்ற நிலையிருப்பின் இந்த உலகை இயக்குகின்றவன் கெட்டுத் தொலைக. “இரந்தும் இழிவுச் சிறப்பு உம்மை. “உயிர் வாழ்தல்' என்றமையால் சோற்றுக்கே பஞ்சம் என்றுணர்த்தினார். “உலகியற்றியான்’-உலகை இயற்றும் அரசனும் தலைவனும் என்பது கருத்து. இறைவன் என்ற உரை பொருந்தாது. கடவுள் படைப்பில் பொதுமையே இருக்கும். 1062. 1063. இன்மை இடும்பை இரந்துதீர் வாம்என்னும் வண்மையின் வன்பாட்டது இல். வறுமையின் துன்பத்திற்கு ஒருவரிடம் இரந்து வாங்கித் தீர்வு காணலாம் என்று கருதும் வன்மைபோலப் பிறிதொரு வன்மை இல்லை. இரக்கப்படுவாருக்குத் துன்பமும் இழப்பும் தருதலின் இரந்து தீர்வு காணலை,“வன்மை” என்றார். 1063. 1064. இடம்எல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம்இல்லாக் காலும் இரவுஒல்லாச் சால்பு. வாழ்வதற்குரிய ஒன்றும் இல்லாத பொழுதும் இரந்து வாழ்தலுக்கு உடன்படாதாரின் பெருமை, இந்த உலகில் நிறைந்து விளங்கும். வாழ்தலை முதன்மையாகக் கருதாமல்மானத்தைப்பெரிதாகக் கருதி இரவாமை பெருமை என்று கூறியது. 4064. 1065. தெள்நீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது உண்ணலின் ஊங்குஇனியது இல். தெளிந்த தண்ணிரைப் போன்று சமைத்த கூழேயாயினும் உழைப்பு தந்ததை உண்பதினும் இனியது ஒன்றும் இல்லை. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 303