பக்கம்:திருக்குறள் உரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் தீயமக்களாயின் இம்மையில் புகழும் செல்வமும் குறையும், மறுமையில் இன்ப அன்பும் கிடைக்காது. 62. 63. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும். தம் மக்களைத் চঞ্চ செல்வம் என்று பாராட்டுவர் பெற்றோர்; மக்கள் செய்யும் பொருளும் புகழும் அவர்கள் செயல்பாட்டுவழி பெற்றோரை வந்தடையும். 63. 64. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். தம்மக்களின் சிறிய கைகளால் துழாவிக் குழைக்கப்பெற்ற சோறு பெற்றோருக்கு அமிழ்தினும் இனிது. சுவையற்றதும் அன்பின் மிகுதியால் சுவையாகிறது. 64. 65. மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று.அவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. பெற்றோர் தமது குழந்தைகளின் உடம்பைத் தொடுதலில் உடலின்பத்தையும் அவர்தம் மழலைச் சொற்களைக் கேட்டலில் செவி இன்பத்தையும் பெறுவர். 65. 66. குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொற் கேள தவர். தம் குழந்தைகளின் மழலைச்சொற்களைக் கேளாதவர்கள் குழலிசையும் யாழிசையும் இனிது என்று கூறுவர். மழலை - குதம்பை போன்ற சொல் என்று கூறியமையின் உள்நோக்கம் இல்லாது இயல்பாக அமைந்த சொல். அது இன்பம் தருவது. . 66. 67. தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல். தந்தை மகனுக்குச் செய்யும் உதவியானது கற்றோர்கள் கூடியிருக்கும் அவையில் முதன்மை பெறச் செய்தல். கல்வி கேள்விச் சார்புகளால் மற்றவர் மதிக்கத்தக்க முதன்மை பெறுதல். 67. 28 தவத்திரு. குன்றக்குடி அடிகளார் உரை