பக்கம்:திருக்குறள் உரை.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் என்பதாயிற்று. தேவர்கள் நல்லனவே விரும்புபவர்கள். ஆதலால் அவர்கள் விரும்புவன செய்தால் தவறில்லை என்று உணர்த்தும் பாங்கறிக. ஆனால் புராணங்களில் வரும் தேவர்கள் கீழ்மக்கள் போலத்தான் விரும்பிச் செய்து வாழ்ந்திருக்கிறார்கள். 1073, 1074. அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். கீழ்மக்கள், தமக்கு அடங்கிநடப்பாரைக் கண்டால் தாம் அவரினும் மிக்கோள் என்று செருக்கு அடைவர். சிறுமைகள் பல செய்வதில் போட்டி அதில் வெற்றிப் பெருமிதத்தைக் காட்டுதல் கயமையின் இயல்பு. 1074, 1075. அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் அவாஉண்டேல் உண்டாம் சிறிது. கீழ்மக்களது ஒழுக்கம் அச்சமே. அடுத்துச் சிறிது அவாவும் உண்டு. “தாம் செய்யும் தீமைகளால் துன்பம் வருமே என்ற அச்சம்' கள்வருக்குப் புதரும் போலீஸ்காரரேயாம். 1075. 1076. அறையறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்து உரைக்க லான். தாம் கேட்டறிந்த பிறருக்கு உரைக்கலாகா மறைவான செய்திகளைப் பிறருக்கு எடுத்துச் சொல்லுதலில் கீழ்மக்கள் பறையினை ஒப்பர். மறைவானவை, மறைவானவையாகவே பேணப்படுதல் வேண்டும். இரகசியங்களை வெளிப்படுத்துபவர் மனிதர் அல்லர் பறை போன்றவர். 1076. 107. ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுஉடைக்கும் கூர்ங்கையர் அல்லா தவர்க்கு. தமது கதுப்பினை (கன்னத்தினை) உடைக்கும் கொடியவர்களுக்கே உண்ட கையைத் தெறிப்பர் கீழ்மக்கள். மற்றவர்களுக்கு உண்ட கையைத் தெறிக்கச் செய்யார். கயவர் இயல்பாகக் கொடுக்க மாட்டார்கள். அடிக்கும் உதைக்கும் அஞ்சிக் கொடுப்பர். 1077. 306 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை