பக்கம்:திருக்குறள் உரை.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 1078. சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ். சான்றோர்கள் சொல்லிய அளவிலேயே பயன்படுவர். கீழ்மக்களோ கரும்பை இடித்துச் சாறு எடுப்பது போல் கொலையனைய துன்பம் தந்தாலே பயன்படுவர். மிக உயர்ந்தவர்கள் சொல்லப்பயன்படுவார்கள். மிகவும் கீழானவர்கள் கொல்லப் பயன்படுவார்கள். 1078. 1079. உடுப்பது உம் உண்பது உம் காணின் பிறர்மேல் வடுக்கான வற்றாகும் கீழ். பிறர் உடுத்தும் உண்டும் வாழ்வதைக் கானின் அவர்மீது குற்றங்களைக் காண்பர் கீழ்மக்கள். உண்பதிலும் உடுப்பதே சமுதாயத் தேவை என்பதால் முதலில் உடுப்பதைக் கூறினார். உடுப்பது உம் உண்பது உம் பெறாது வறிதே வாழ்தலின் தமது மாட்டாமையை மறைப்பான் வேண்டிப்பெற்றான் மீது குற்றம் சுமத்திடுவர். 1079. 1080. எற்றிற்குஉரியர் கயவர்ஒன்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து. கயவர், ஒரு துன்பம் வந்துற்றபொழுது தம்மையே விற்று விடுவர். அவர் (கயவர் எத்தொழிற்கு உரியர்?) ஒன்றுக்கும் உரியரல்லர் என்பது கருத்து. கயவர் தம்மையே விற்றுப் பிழைப்பர் என்றால் நம்பிக்கைக்கு உரியவர் அல்லள் என்பது உணர்த்தியது. 1080. (பொருட்பால் மூலமும் உரையும் முற்றுப் பெற்றது) 米米米米米 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 307