பக்கம்:திருக்குறள் உரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் 8. அணி புடைமை தந்தை, தாய், மக்கள் - இஃது ஒர் அன்பு விளைவு. இந்த விளைவு அன்பினால் ஆயது; அன்பிற்கே உரியது. அன்பு என்பது காமத்தின் முதிர்ச்சி; காதலின் பயன் இன்பம்; அன்பின் விளைவு- தியாகம்; அர்ப்பணிப்பு. அன்பின் பயன் இன்பம், அன்பிலே தொடங்கி, அன்பிலே வளர்ந்து அன்பாக அமைந்து விளங்குவதால் மக்கட்பேற்றினைத் தொடர்ந்து அன்புடைமை கூறப்பெற்றது. 71. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணநீர் பூசல் தரும். அன்புணர்வு வெளிப்படாமல் அடைத்து வைக்கும் தாழ் இல்லை. அன்பு காட்டப்படுவோரிடம் துன்பங்கள் கண்டறியும்பொழுது கண்களிலிருந்து கண்ணிர் ஒழுகும்; அப்போது அன்பு உலகு அறியப் பெறும். அன்பு என்பது ஒர் இயக்கநிலை உணர்வு. செயல்பாடிலாத அன்பு இல்லை. செயற்பாடற்ற நிலைக்கு அன்பு என்று கூறுதல் தவறு. 71. 72. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. அன்பில்லாதவர்கள் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமையாக்கிக் கொள்வார்கள். அன்புடையவர்கள் பொருள்கள் மட்டுமின்றித் தமது உடலையும் கூட மற்றவர்க்கு உரிமைப்படுத்துவார்கள். 72. 73. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. அருமையான உயிருக்கு எலும்புகளால் ஆகிய உடம்புடன் ஏற்பட்ட தொடர்பு அன்பினாலமைந்த வழக்கமாகும். காதலிருவர் கலந்த அன்பினால் உயிருக்கு உடம்பின் தொடர்பு கிடைத்தது. அன்பினால் வந்த வாழ்க்கையை அன்பிற்கே பயன்படுத்துக என்பதாம். 73 74. அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. அன்பு ஆர்வத்தைப் பெற்றுத் தரும்; ஆர்வம் நட்பினைப் பெற்றுத் தரும். அன்பு மேலும் வளர்ந்த செயற்பாட்டு நிலைக்கு ஆர்வம் என்று பெயர். ஆர்வம் மற்றவர்களை நோக்கி விரிந்து சென்று 30 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை