பக்கம்:திருக்குறள் உரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் - புறத்துறுப்புக்கள் - இடம், பொருள், ஏவல் ஆகியனவாம். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகள் என்று கூறினும் பொருந்தும், 79. 80. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. அன்பின்வழிநின்று ஒழுகும் உடம்பே உடம்பென்று வழங்கப்பெறும். அன்பு இல்லாதவரின் உடம்பு, எலும்பைத் தோலால் போர்த்த போர்ப்பே. 80. 9. விருந்தோம்பல் விருந்து- புதியது. விருந்தினர் - புதியவர்கள். நாட்டிடைக் கடந்துவரும் புதியவர்கள். இவர்களுடன் கலந்து பேசிமகிழ்வதாலும், விருந்தளிப்பதாலும் அறிவு விரிவடைகிறது. அன்பின் பரிணாம எல்லை விரிவடைகிறது. வாழ்க்கையின் பயனும் உறுதிப்படுத்தப்படுகிறது. இல்லற வாழ்க்கையின் அமைப்பே விருந்தோம்புத லுக்குரியது. அதனால், இல்வாழ்க்கையினைத் தொடர்ந்து கூறப்பெற்றது. 81. இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி வேளாண்மை செய்தல் பொருட்டு. கணவனும் மனைவியும் தம் இல்லத்தின்கண் இருந்து, தம்மையும், தம் மக்களையும் இல் வாழ்க்கைக்குரிய பொருள்களையும் பேணிக் காத்து வாழ்வதெல்லாம் விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவி செய்தல் பொருட்டேயாம். 81, 82. விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா மருந்துஎனினும் வேண்டற்பாற் றன்று. மரணமிலா வாழ்வைத் தரும் மருந்தேயானாலும் விருந்தினர் வீட்டிற்கு வெளியே இருக்க, தாம் தனியே உண்ணல் விரும்பத்தக்கதன்று. 82. 83. வருவிருந்து வைகலும் ஒம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று. நாள்தோறும் வரும் விருந்தினரைப் பேணுவானது இல்வாழ்க்கை வறுமையால் அழிவதில்லை. 83. 84. அகனழர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். 32 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை