பக்கம்:திருக்குறள் உரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் முகனமர்ந்து நல்ல விருந்தினரைப் பேணுவானுடைய இல்லத்தின்கண் திருமகள் மனமகிழ்ந்து தங்கி வாழ்வாள். 84. 85. வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்துஓம்பி மிச்சில் மிசைவான் புலம். விருந்தினரை முதலில் உபசரித்து உண்ணச் செய்தபின் மீந்ததைத் தாமுண்ணும் வேளாளனது நிலத்திற்கு, தாம் விதை தெளித்தல் வேண்டியதில்லை. விருந்தோம்பி வாழ்வான் வயல் பலருக்கும் பயன்படுவதால் எவரும் விதைப்பர். உரியவன் விதைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதே கருத்து. - - 85. 86. செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்துஇருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு. முன்னே வந்த விருந்தினரை உபசரித்துப்பின்னும் ഖത്രി விருந்தினர்களை உபசரிக்கக் காத்திருப்போன் வானத்தவர்க்கு நல்விருந்தாவான். 86. 87. இனைத்துணைத்து என்பதுஒன்று இல்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். விருந்தினர்க்கு உணவு படைத்தலின் பயன், இவ்வளவினது என்று அளவிட்டுச் சொல்லுதல் எளிதன்று. விருந்தினர் தகுதியின் அளவே அதன் பயன். 87. 88. பரிந்துஓம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். விருந்தினரைப் பேணி உபசரிக்காதவர்கள் பொருளை வறிதே காத்து, இழந்த்ோம் என்பர். 88. 89. உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஒம்பா மடமை மடவார்கண் உண்டு. செல்வநிலையில் வறுமை, விருந்து ஒம்பாத அறியாமை, பேதையரிடத்தில் உண்டு. 89. 90. மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. - அனிச்சப்பூ, மோந்தால் வாடும். விருந்தினர், முகம் திரிந்து நோக் வாடுவர். 90. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 33.