பக்கம்:திருக்குறள் உரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்' 10.இனியவை கூறல் இல்வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும் இணைப்பு தேவை. இணைப்புக்கு உரமிடுவது இனிய சொற்களேயாம். எல்லாம் நன்றாகச் செய்யினும் இனிய சொற்கள் கூறத் தெரியாவிடில் அனைத்தும் பாழ். ஆதலால், இனிய கூறலும் அறமாயிற்று. அதுவும், இல்வாழ்க்கைக்கு இனிய சொற்கூறுதல் தவிர்க்க இயலாத கடமை. விருந்தில் பரிமாறப்பெறும் சுவைமிக்க பண்டங்களைவிட இன்சொல்லே மிகுதியும் பயன்தரும் என்பதாயிற்று. 91. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். வஞ்சனையில்லாத, மெய்ப்பொருளை அறிந்த சான்றோரின் வாய்ச் சொற்களே இனியவாய்ச் சொற்களாவன. 91. 92. அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகலன்அமர்ந்து இண்சொலன் ஆகப் பெறின் மனமுவந்து பொருளைக் கொடுத்தலினும் முகமலர்ந்து இனிய சொற்களை வழங்குவது நல்லது. 92. 93. முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான்ஆம் இன்சொ லினதே அறம். - ஒருவரிடம் மலர்ந்த முகத்துடன் இனிதே நோக்கிஅகம் மலர்ந்த நிலையில் இனிய சொற்களைச் சொல்லுதல் அறமாகும். 93. 94. துன்புறுஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறுஉம் இன்சொ லவர்க்கு. யாரிடத்தும் இன்புறுத்தக்கூடிய இன்சொல்லை சொல்லுபவர்களுக்குத் துன்புறுத்தும் வறுமை இல்லை. 94. 95. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணிஅல்ல மற்றுப் பிற. அடக்கம் உடைமையும் இனிய சொல் கூறுதலுமே ஒருவனுக்கு அணிகள். மற்றப் பொன்னணிகள் அணிகள் அல்ல. 95. 34 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை