பக்கம்:திருக்குறள் உரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 96. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின். நன்மையை நாடி இனிய சொற்களைக் கூறின் தீவினை நீங்கும். நல்வினைப் பயன் வளரும். 96, 97. நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல். நன்மையைச் செய்வதும் இனிமைப் பண்பிற் சிறந்ததுமாகிய இனிய சொல் நீதியையும் அறத்தையும் விளைவிக்கும். 97. 98. சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும். பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொற்கள் ஒருவருக்கு இருமையும் இன்பம் தரும். 98 99. இன்சொல் இனிதுஈன்றல் காண்டான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது பிறர் கூறிய இனிய சொல்லால் இன்பம் நுகர்ந்ததை அறிந்தவன், பிறரிடத்தில் வன்சொல்லை வழங்குவது ஏன்? 99. 100. இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. இனிய சொற்கள் எளிதில் சொல்ல வாய்ப்பிருக்கவும் கடுஞ்சொற்களைக் கூறுதல், கையகத்தே கணியிருக்க அதனை நுகராது, அயலிடத்தே உள்ள காயைக் கவர்வது போலாம். 100. 11.செய்ந்நன்றி அறிதல் ஒருவர் செய்த உதவியை மறவாதிருத்தல் செய்ந்நன்றியறிதலாகும். மறவாதிருத்தல் என்பது, அந்த உதவியின் அருமைப்பாட்டினை அறிந்து, அந்த உதவியின் தன்மையினை, பயனைப் பேணி வளர்த்துப் பாதுகாத்துக்கொண்டு வாழ்வதன் மூலம் உதவியவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருதல் ஆகும். செய்ந்நன்றியறிதல் என்பது நடைமுறையில் உள்ள நன்றி கூறல் ஆகாது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை . 35