பக்கம்:திருக்குறள் உரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் சமன் செய்து :- தன்னைச் சமநிலை செய்து கொள்ளல். பழுதுற்ற தராசு சமநிலை காட்டாது. அதுபோலச் சார்புகளால் குறைப்பட்ட மனமுடையவர்கள் நடுவுநிலை இழப்பர். சீர்தூக்கல்:- இருவேறு கருத்துக்களையும் விருப்பு வெறுப்பின்றிச் சமநிலையில் எண்ணி உயர்வாராய்தல். கோடுதல் :- கருத்தின் உயர்வு பற்றியதாக இல்லாமல் சார்புகளாலாகிய காரணங்களுக்காக ஒருபால் சாய்தல் கோடுதலாகும். துலாக்கோல் - நடுமுள். 118. 19. சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உள்கோட்டம் இன்மை பெறின். நடுவுநிலையாவது சொல்லின்கட்சார்பு இல்லாமல் நிற்பதாகும். இந்த நடுவுநிலைப்பண்பு மனத்தின்கண் சார்பு இல்லாமல் இருந்தாலே கைவரும். உட்கோட்டமின்மை பெறின்- மனத்தின் கனன் சார்பின்றி இருத்தல் அரிது என்பது கருத்து. 119. 120. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின். பிறர் பொருளையும் தம் பொருள் போல் பேணி வாணிகம் செய்வோர்க்கு வாணிகம் நன்றாக அமையும். அதாவது, கொள்வது மிகையும் கொடுப்பது குறைவும் ஆகாமல் செய்வது வாணிகத்திற்கு ஆக்கம் தரும். 120. 13 . அடக்கமுடைமை பொறி புலன்களை அடக்கநிலையில் பழக்கி இயக்குதல், அதாவது மற்றவர்க்குத் தீங்கு செய்யாநிலையில் இயங்குதல். அடக்கங்களுள் சிறந்தது நாவடக்கம்; அதாவது பேச்சில் கவனமாக இருத்தல். யார் மாட்டும் எப்போதும் யாதானும் ஒரு தீப்பொருள் உண்டாக்கக்கூடிய சொற்களைச் சொல்லாதிருத்தல். எதிர் கொண்டு அழைத்தல், இருக்க வைத்த பிறகு இருத்தல், அதுவும் 'இரு வெனக் கூறிய பிறகு இருத்தல் முதலியன அடக்கமுடைமையின் பாற்படும். 121. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். 40 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை