பக்கம்:திருக்குறள் உரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஒருவனை அடக்கமாகிய குணம் அமரர்கள் உலகத்துள் வைக்கும். அடங்காமை நரகத்துள் செலுத்திவிடும். சொர்க்கம், நரகம் - இன்ப துன்பங்களுக்கு அடக்கமும் அடங்காமையும் முறையே காரணம். அடக்கமாவது பொறி புலன்களைத் தம் வழியில் செல்ல விடாது நன்னெறிக்கள்ை செலுத்தி வழிநடத்தும் குணமாகும். 121. 122. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனின்ஊஉங்கு இல்லை உயிர்க்கு. உயிர்களுக்கு அடக்கத்தின் மிக்க செல்வம் இல்லை. ஆதலால் அடக்கத்தை உறுதிப்பொருளாகக் கொள்க. பொருள் ஈட்டவும், ஈட்டிய பொருளைப் பேணிப் பாதுகாக்கவும் அடக்கம் துணை செய்யும். 122. 123. செறிவுஅறிந்து சீர்மை பயக்கும் அறிவுஅறிந்து ஆற்றின் அடங்கப் பெறின். அடங்கி நடத்தல் அறிவின் பயன் என்றறிந்து அடங்குதலை நன்னெறியாக ஏற்று ஒருவன் அடக்கத்துடன் வாழ்வானாகில் அவனது அடக்கம் நல்லோரால் அறியப்பெற்று அவனுக்குச் செல்வத்தைக் கொடுக்கும். 123. 124. நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. தம் நிலையில் மாறுபடாது அடக்கத்துடன் வாழ்பவனது புகழ் உயர் மலையினும் பெரியதாகும். திரியாது அடங்கல் - அறிவு, அன்பு இவற்றின் வாயில்களாக விளங்கும் பொறிகளை புலன்களை அந்த நோக்கத்திற்கேற்றவாறு பழக்குதல், நிறுத்துதல் சிறப்பாகும். 124. 125. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. பெருமிதமின்றி அடங்குதல், எல்லோருக்கும் நல்லது. அதிலும் செல்வமுடையோருக்கு மேலும் செல்வம் போல ஆகும். செல்வம் , செருக்கினைத் தரும். அதனால் அடக்கமுடைமை நல்லது என்கிறார். 125. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 41