பக்கம்:திருக்குறள் உரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் 126. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து. ஆமை போல ஒருவன் ஒருபிறப்பில் ஐம்பொறிகளையும் அடக்க வல்லவனாயின் அவனுக்கு ஏழு பிறப்புக்களும் மேம்பாடுடையதாக அமையும். தனது நலத்திற்குத் துணைசெய்யாத துன்பத்தை விளைவிக்கும் சூழ்நிலையில் அனைத்துப் பொறிகளையும் உள்ளிழுத்து அடக்கிக் கொண்டு ஆமை தப்பித்துக் கொள்வதைப் போல், தீயநெறிகளிலிருந்து தமது பொறிகளையும் மீட்டுப் பாதுகாத்துக் கொள்ளுதல் மூலம் எழுமையும் மேம்பாடு அடையலாம். - 126. 127. யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. எந்த ஒரு பொறியை அல்லது புலனைக் காக்கத் தவறினாலும் நாக்கு ஒன்றை மட்டுமாவது காத்துக் கொள்க. அங்ங்ணம் நாக்கைக் காக்கத் தவறினால் சொற் குற்றப்பட்டுத் துன்புறுவர். 127. 128. ஒன்றானும் தீச்சொல் பொருள்பயன் உண்டாயின் நன்றுஆகா தாகி விடும். ஒருவன் சொல்லும் சொல்லில் ஒரே ஒரு பொல்லாங்கு உண்டாயினும் அறமாகாதாகி விடும். 128. 129. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு. தீயினால் சுட்டபுண் வடுக்காணப்பட்டாலும் உள் ஆறும். ஆனால் நாவினால் சுட்ட வசையாகிய வடு எந்நாளும் ஆறாது. 129. 130. கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. மனத்தில் கோபம் தோன்றாமல் காத்து கற்க வேண்டியன எல்லாம் கற்று அடங்க வல்லவனுடைய நண்மையை அதுவரும் வழிபார்த்து அறக்கடவுள் நின்று கொண்டிருக்கும் . 130. 14. ஒழுக்கமுடைமை தனக்கும், தனது உடலுக்கும், தன்னைச் சார்ந்தும், சூழ்ந்தும் வாழ்வாருக்கும் யாதொரு தீங்கும் நிகழாதவாறு ஒழுகுதல் ஒழுக்கமாகும். அழுக்காறு , அவா, வெகுளி, இன்னா செய்தல், பிறர் மனை நயத்தல், 42 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை