பக்கம்:திருக்குறள் உரை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் 134 மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். பார்ப்பனன், கற்ற வேதத்தை மறந்தாலும் திரும்பக் கற்றுக் கொள்ளமுடியும். ஆனால், பார்ப்பனப் பிறப்புரிமைக்குரிய ஒழுக்கம் குன்றக் கெடும். பிறப்பு:- இங்கு மானிடப் பிறப்பைக் குறிப்பதன்று. பார்ப்பனருக்கு "இருபிறப்பாளர்” என்று ஒரு பெயர் உண்டு. அதாவது முப்புரிநூல் அணிந்து பார்ப்பன ஒழுக்கத்தை மேற்கொள்ளும் இரண்டாவது பிறப்பாகும். பிறப்பொழுக்கமாவது:- ஓதல், ஒதுவித்தல் தொழிலில் காலூன்றி நிற்றல்; ஓதுதலுக்குரிய ஒழுக்க நெறிகளில் பயிலுதல். பார்ப்பனர், வேதத்தை மறந்தாலும் திரும்பக் கற்றுக்கொள்ளலாம். ஆனால், தம்மை உயர்த்திக் காட்டும் குலச் சிறப்பு, தமிழ ஒழுக்கம் குன்றக்கெடும் என்பார் பாவாணர். 434. 135. அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு. பொறாமை உள்ளவனிடத்தில் செல்வம் இல்லாதது போல, ஒழுக்கம் இல்லாதவனிடத்து உயர்வு இல்லை. 135, 136. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து. ஒழுக்கக் கேட்டால் உண்டாகும் கேட்டினை அறிந்து ஒழுக்கத்தில் சுருங்கார் அறிவுடையார். 136. 137. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி. ஒழுக்கத்தினால் எல்லாரும் உயர்வடைவர். ஒழுக்கத்திலிருந்து தவறுவதால் தமக்கு உரியதல்லாத பழியையும் அடைவர். - < 後 ஒருவர் ஒழுக்கத் தவறுடையவராக இருப்பின் அவர் செய்யாத குற்றங்களுக்கும் கூட, அவரைப் பொறுப்பாக்குவது உலக இயல்பு. 137. 138. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும். ஒருவனுக்கு நல்லொழுக்கம் நன்மைக்குக் காரணமாய் அமையும். தீயொழுக்கம் எப்பொழுதும் துன்பத்தையே தரும். 138. 44 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை