பக்கம்:திருக்குறள் உரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 139. ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயால் சொலல். மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் சொல்லுதல் ஒழுக்கமுடைய உயர்ந்தோர்க்கு இயலாது. 139. 140. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார். உலக மக்கட் சமுதாயத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார், பல நூல்களைக் கற்றவரேனும் அறிவில்லாதவரே! 140, 15. பிறனில் விழையாமை ஒழுக்கமுடைமையின் விரிவில் ஒன்று பிறனில் விழையாமை. பிறரின் மனைவியை - உரிமையை விரும்புதல் அறமன்று. அதனை அடைதலும் எளிதன்று. ஒரோவழி அடைந்தாலும் பயனில்லை. துன்பமே மிகுதி. பிறனில் விழைதல் தனி மனித அளவிலும் சரி, சமூக அளவிலும் சரி கேடு பயப்பதேயாகும். 141 பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல். பிறன் மனைவியை விரும்பி ஒழுகும் மடத்தனம், நிலவுலகில் அறம், பொருள் நூல்களைக் கற்றறிந்தோரிடம் இல்லை. 141. 142. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல். அறத்தினைச் செய்யாது வாழும் மாந்தரில் கடைசியில் நிற்போர், பிறன் மனைவியை விரும்பி, அவள் வாழும் விட்டின் பின் வாயிலில் காத்து நிற்கும் பேதையாவர். ; : 142. 143. விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்துஒழுகு வார். தம்மை நம்பியவர் விட்டில் அவர் மனைவியிடம் தீச்செயலைச் செய்து ஒழுகுபவர் இறந்தவரேயாம். இது உறுதி. வாழ்க்கையின் பயனாகிய அறம், பொருள், இன்பம் அடையாமையினால் செத்தார் என்றார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 45