பக்கம்:திருக்குறள் உரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தனக்குத் தீங்கு செய்தவனை ஒறுத்தலால் உண்டாவது ஒரு நாளை இன்பமே; அத் தீமையைப் பொறுத்தார்க்கு உலகம் உள்ளளவும் புகழ் உண்டு. ஒரு நாளை இன்பமாவது நினைத்ததை முடித்தோம் என்று கருதும் அளவில் தோன்றும் இன்பமாகும். 156. 157. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று. செய்யத் தகாத கொடிய செயல்களைத் தனக்குப் பிறர் செய்தாராயினும் அத்துன்பத்திற்குத் தான் நொந்து, அறம் அல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் நன்று. 157. 158. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல். மனச்செருக்கால் தனக்குத் தீயவற்றைச் செய்தாரைத் தன்னுடைய பொறையா லுயர்ந்த தகுதியால் வென்றுவிடுக. 158. 159. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர். துறந்தாரினும் தூய்மை உடையவர் நெறியைக் கடந்தவர்களின் இன்னாத சொற்களைப் பொறுத்துக் கொள்பவர். துறந்தாரிலும் சிலர் இகழ்ச்சியினைப் பொறுக்க மாட்டாது இன்னாத செய்த புராணவழிக் கருத்தை மறுத்தது. 159. 160. உண்ணாது நோற்பார் பெரியார் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின். உண்ணாது தவம்செய்யும் பெரியர் பிறர் சொல்லும் கடுஞ்சொற்களைப் பொறுப்பார்க்குப் பின்னே வைத்து எண்ணப்படுவர். 160. 17. அழுக்காறாமை பொறையுடைமைக்கு நேர் எதிர்ப் பண்பு, பொறுக்கமுடியாமை. அதாவது, ஒருவர் செல்வம், பெருமிதம் முதலியன உடையராதலைத் தாங்கிக் கொள்ள முடியாமை அழுக்காறாகும். ஒழுக்கக் கேடுகளுக்கெல்லாம் தலைமையானது அழுக்காறேயாம். அழுக்காறுடையார் ஒருபொழுதும் உயர்தல் அரிது. அழுக்காறாமை ஆக்கத்தையும் தரும்; மனிதக் கூட்டத்தையும் தரும். தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 49