பக்கம்:திருக்குறள் உரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் 168. அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும். பொறாமை என்று சொல்லப்படும் பாவி ឆ្ងល់នានា,ឃលា இம்மைக்கண் செல்வம் கொடுத்து, மறுமைக்கண் நரகத்தில் புகுத்தி விடுவாள். 曾 இந்தியநாடு எல்லாவளங்களும் பெற்றிருந்தும் தகுந்த முயற்சிகள் இருந்தும் முன்னேறாததற்குக் காரணம் இந்த நாட்டில் 'அழுக்காற்றுப்பாவி' நடமாட்டம் இருப்பதால்தான் இந்தப்பாவி துறவிகளையும் பிடித்து ஆட்டுவது வியப்பிற்குரியது . 168. 169. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும். பொறாமையுடையவனுடைய செல்வமும் செம்மை நலமுடையானுடைய கேடும் ஆராய்தலுக்குரியன. அறநூற்கொள்கைக்கு முரணான சமூக அமைப்பு, இயற்கை என்று கொள்ளத்தக்கதன்று. ஆராய்ந்து பார்க்க வேண்டிய ஒன்று. அரசின்முறை பிறழ்வாலும் இம்மாறுபாடுகள் நிகழலாம் என்பது கருத்து, அரசியல் பிழையும் இல்லையென்று துணிந்த பிறகே பழவினை என்ற முடிவுக்கு வரலாம். 169. 70. அழுக்காற்று அகன்றாரும் இல்லை.அஃது இல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் பொறாமைப்பட்டுப் பெரியவராயினாரும் இல்லை. பொறாமை யின்மையால் பேராக்கத்தை இழந்தவர்களுமில்லை. 170. 18. வெஃகாமை வெஃகாமை என்பது பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதாகும். பிறர்பொருள் என்பது ஒருவர் உழைப்பில் உருவான பொருளில் அவருக்குரிய $ಟ್ಗTಖ್ರ கூலியைக் குறிக்கும். குறைந்த கூலி தருதுலும் வெஃகல் குற்றத்தின் பாற்படும். 171. 171. நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும். . ஒருவர் உழைத்து ஈட்டிய பொருளை ஒருவன் நடுநிலையின்றி, ஆசைப்படுவானாயின் அவனுடைய குடிகேடுற்றுப்பல குற்றங்களையும் தரும். நன்பொருள்: உழைப்பின் வழிவந்த பொருள். 171. 52 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை