பக்கம்:திருக்குறள் உரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 172. படுபயன் வெஃகி பழிப்படுவ செய்யார் நடுவண்மை நானு பவர். நடுநிலையின்றி நடக்க அஞ்சி நாணுபவர்கள் பிறர் பொருளால் வரும் நன்மையைக் கருதிப் பழிக்கத் தக்க செயல்களைச் செய்யார். 172. 173. சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர். சிறுபொழுது இன்பத்தை விரும்பிப் பிறர் பொருளுக்கு ஆசைப்பட மாட்டார்கள், சிறந்த இன்பத்தை வேண்டுபவர்கள். - சிற்றின்பம் என்பதை இம்மை இன்பம் என்றோ, காதலின்பம் என்றோ கூறுவது தமிழ் மரபன்று. 173. 174. இலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர். ஐம்புலன்களை வென்று குற்றமற்றவராக விளங்குபவர், வறுமையைக் கருதிப் பிறர் பொருளை விரும்ப மாட்டார். 174. 175. அஃகி அகன்ற அறிவுஎண்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின். பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டு, அதன் காரணமாக எல்லாருக்கும் அற்பச் செயல்களைச் செய்பவர்கள் நுட்பமுடைய விரிவான அறிவைப் பெற்றிருந்தும் என்ன பயன்? நுட்பம் : உணர்வு. அகன்ற பொருளறிவு. 175. 176. அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும். அருளை விரும்பி அதனை அடைதற்குரிய நெறியில் நின்றொழுகுபவர்கள், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுக் கைப்பற்ற நினைத்துத் திட்டமிடும் அளவிலேயே கெட்டுப் போவர். 176. 177. வேண்டற்க வெஃகிஆம் ஆக்கம் விளைவயின் மாண்டற்கு அரிதாம் பயன். பிறர் பொருளை விரும்பிக் கவர்தலால் வரும் ஆக்கத்தை விரும்ப வேண்டாம். அந்த ஆக்கத்தின் விளைவு நன்றாக அமையாது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 53