பக்கம்:திருக்குறள் உரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஒருவன் அறத்தினை எடுத்துக்கூறானாயினும் நல்லதல்லாதன செய்வானாயினும் அவன் புறங்கூற மாட்டான், என்று சொல்லப்படுதல் இனியது. அறங்கூறாமையால் - நல்லது அல்லாதன செய்தலால் விளையும் தீமையைவிட புறங்கூறலால் விளையக்கூடிய தீமை அளவில் கூடுதல் என்பதை அறிக. 181. 182. அறன்.அழிஇ அல்லவை செய்தலின் தீதே புறன்.அழிஇப் பொய்த்து நகை. அறத்தினை அழித்து நல்லதல்லாதன செய்தலினும் தீயது, ஒருவனைக் காண்புழி நகைமுகம் காட்டி உவப்புடன் பேசி அவன் இல்லாத போது குற்றங்குறைகளைக் கூறல். 182. 183. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும். ஒருவரைக் காணாதவிடத்துப் பழிசொல்லியும் கண்டவிடத்து இனியவனாகப் பேசியும் பொய்ம்மையாக வாழ்வதை விட புறங்கூறுதலையும் பொய்ம்மையையும் தவிர்த்துச் சாதல் அறங்கூறும் பயனை இம்மையிலும் தரும்; மறுமையிலும் தரும். புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்பவர் யாரிடத்தும் உண்மையாக நடந்து கொள்ள மாட்டார்; ஆதலின் வாழ்க்கை அமைய இயலாது; வாழ்க்கை அழியும் என்பது கருத்து. புறங்கூறுதல் பலரிடம் பகை உணர்வைத்தான் தோற்றுவிக்கும். அதனால், சமுதாயமே சீரழியும். ஆதலால் புறங்கூறல் தீமையாயிற்று. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தல் பழக்கமாகி விட்டால் அவர் திருந்த வழி சாதலே என்பதும் உணர்த்தியவாறு. 183. 184. கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க முன்இன்று பின்நோக்காச் சொல். ஒருவன் எதிரேநின்று, கண்ணோட்டமின்றிச் சுடுசொற்களைக் கூறினாலும் கூறுக. அவன் இல்லாத இடத்தில் அவனைப் பற்றிய குற்றங்களைக் கூறாதொழிக. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 55