பக்கம்:திருக்குறள் உரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் புறங்கூறலின் பின் விளைவு, துன்பமாக அமையும் எண்பது கருத்து. பின்னோக்காச் சொல் நேற்று முன்தினம் பழி சுமத்துபவரிடம் அன்பொழுகப் பேசிய சொற்களை நினையாது கூறல். புறங்கூறல் மூலம் நட்பு கெடுதலால், பின் முகம்நோக்கி வாழ முடியாமை வரும் என்பதும் கருத்து. t84. 185. அறம்சொல்லும் நெஞ்சத்தான் அண்மை புறம்சொல்லும் புண்மையால் காணப் படும். ஒருவன் அறம் சொல்லும் நெஞ்சுடையானல்லண் என்பதை அவனுடைய புறஞ்சொல்லும் புண்மையினாலே அறியலாம். புறங்கூறுபவர் அறத்திற்காகக் கூறுவதாகக் கூறுவர். அவ் அறத்தினை உடையவர். அவர் முன் சொல்லத்தடைஎன்ன? அங்ஙனம் நேரிற் கூறாது. புறத்தே கூறுவதால் அறம் நோக்கமன்று என்பது தெளிவு. 185. 186. பிறன்பழி கூறுவான் தண்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும். ஒருவண் இல்லாதவிடத்து அவன் பழியைக் கூறுவானுடைய பழிக்கத்தக்க செயல்களையும் கேட்போர் அறிந்து கூறுவர். 186. 187, பகச்சொல்லிக் கேளிரப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர். மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி நட்பினைப் பெற்று வாழும் நன்மையைத் தெரிந்து அறியாதவர்கள் பழகும் இருவரிடையிற் புறங்கூறுத்ல் மூலம் பகை உண்டாக்கிப்பிரித்து விடுவார்கள். 娘 ஆதலால், தனது நண்பனைப்பற்றித் தொடர்பேதும் இல்லாதவர்கள் வந்து தன்னிடம் சொல்பவை புறங்கூறல் என்று உணர்த்தியவாறு.187. 188. துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு. தம்றோடு சேர்ந்து கலந்து வாழ்பவர் குற்றத்தையும் துாற்றும் டயவரகள் தமது பகைவர் மாட்டு எங்ங்ணம் நடந்துகொள்வார்கள். 56 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை