பக்கம்:திருக்குறள் உரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் பயனில்லாத சொல்லை இனிய தண்மையுடைய உயர்ந்தோர் சொல்வாராயின் அவருடைய உயர்வும் மதிப்பும் நீங்கி விடும். 'சொலின்' என்பது சொல்லமாட்டார்கள் என்ற நம்பிக்கையை உணர்த்திற்று. ஆயினும் இன்றைய நடைமுறை இங்ங்ணம் இல்லையென்பதையறிக. இன்று பலர் கூடிய அவையில் பயனற்ற சுவையற்ற தீமையை உமிழ்கின்ற சொற்களைப் பேசுவோர், உயர்ந்தோர் எனப்பாராட்டப்பெறும் புன்மை வளர்ந்து வருகிறது. 195. 196. பயன்இல்சொல் பாராட்டு வானை மகன் எனல் மக்கட் பதடி எனல். பயனில்லாத சொற்களைப் பலகாலும் விரும்பிச் சொல்லுபவனை மாந்தன் என்று சொல்லற்க மக்களுள் பதர் என்று சொல்லுக. பதர் உள்ளிடில்லாதது; ஆயினும் அதனை எரிபொருளாகப் பயன்படுத்தலாம். ஆனால் மாந்தருள் பயனற்றிருப்பவர் எவ்வகையிலும் பயன்படார். 196. 197. நயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர் பயன்இல சொல்லாமை நன்று. நீதியோடு படாத சொல்லை பெரியோர் சொன்னாலும் சொல்க. அதனால் குற்றமில்லை. எக்காரணத்தை முன்னிட்டும் பயனற்ற சொல்லைச் சொல்லாதிருப்பதே நன்று. நீதி தவறிய சொற்களை விடப் பயனற்ற சொற்கள் தீமையானவை. இங்கு நீதி தவறிய சொற்களைச் சொல்வோர் சான்றோர். 'சொல்லினும் சொல்லுக' என்றதால் அவர்கள் சொல்லமாட்டார்கள் என்பது உண்மை. ஒரோவழி சொல்லினும் வெளிப்படையாக உணர்த்த முடியாத ஏதோ ஒரு நன்மையாம் பயனைக்கருதியே சொல்வர். அவ்வழி அது பயனுடையதாம். பயனற்ற சொற்களால் அத்தகைய நன்மை வராது என்று உணர்த்தப் பெற்றது. 197. 198. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல். அறிதற்கு அரிய பயன்களை ஆராயவல்ல அறிவுடையவர்கள் பெரும் பயனில்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்கள்.198. 199.பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர். தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 59