பக்கம்:திருக்குறள் உரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் மயக்கத்தினின்றும் நீங்கிய குற்றமற்ற அறிவுடையார் பயனில்லாத சொற்களை மறந்தும் சொல்லார். இங்கு மயக்கம் என்பது பயன் பயனின்மை, நன்மை-தீமை, இன்பம் - துன்பம் இவைகளைப் பகுத்தறியமாட்டாத நிலை. 199. 200. சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்ண் சொல்லின் பயனிலாச் சொல். சொற்களில் பயனுடைய சொற்களைச் சொல்லுக பயனற்ற சொற்களைச் சொல்லற்க. பயனுடைய சொற்களைச் சொல்லுதலால் நன்மை வளர்கிறது. அதனால், சொல்லுக என்றார். பயனிலாச் சொற்களைச் சொல்வதால் பயனையும் பண்பையும் இழத்தலோடன்றித் தீமையும் வளர்கிறது. அதனால், பயனிலாதன சொல்லற்க என்றார். 200. 21. திவினையச்சம் தீய செயல்கள் செய்தற்கு அஞ்சுதல், தீய செயல்கள் அவற்றைச் செய்வோருக்கும் யாரை நோக்கிச் செய்யப்படுகின்றனவோ அவர்க்கும் ஒருசேரத் துன்பம் தருவன. தீய செயல்களை அஞ்சி ஒழுகுதல் இருமையும் இன்பம் தரும். தீய செயல்கள் செய்ய அஞ்சுவதனாலேயே நல்லன செய்ய நாட்டம் தோன்றும். தற்காப்பு மட்டுமின்றி ஆக்கத்திற்கும் பயன்படும். பயனில சொல்லாமைக்குப் பின் வைக்கப் பெற்றதற்குக் காரணம், பயனில சொல்லுதலில், பொழுது பாழாகிறது. சோம்பல் வந்து அமைகிறது. சோம்பலுடையவர்கள் தங்களுடைய நுகர்வுகளைத் தவிர்த்து விடுவதில்லை. சோம்பேறிகள் நுகர்வுக்குத் தலைப்படும் பொழுது தீவினை செய்தல் இயல்பு. ஆதலால், தீவினையஞ்சி வாழ நல்லன செய்தலில் நாட்டம் வேண்டும். 201.தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு. செருக்கினால் தீவினையாளர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள். நல்லவர்கள் தீவினை செய்தற்கு அஞ்சுவார்கள். செருக்கு, மனச்சான்றை மழுங்கச் செய்து விடும். அதன் காரணமாக எதையும் செய்யத் துணிவர். நல்லோர்க்கு மனச்சான்று செழுமையாக இருக்கும். 201, 202 தீயவை - தீய * பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். 60 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை