பக்கம்:திருக்குறள் உரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் ஒருவன் தான் ஏழை என்று கூறி இரப்பதற்கு முன், அவன் வறுமையறிந்து கொடுத்தல் நற்குலத்திற்குரியானின் சிறப்பு. வறுமையைக் கூறி இரப்பதன்வழி இரப்பவனின் இழிவு வெளிப்படுதலால் கூறாமலே அறிந்து கொடுத்தல் குலச்சிறப்பு என்றார். நற்குலத்தில் தோன்றியோர் எவ்வகையாலும் பிறர்க்கு இழிவு தோன்றுதலுக்கு உடன்படார் என்பது தமிழ் மரபு. இன்று 'ஏழைகள் - “அநாதைகள்' என்று பெருவழக்காக வசதியும் வாய்ப்புமுடையோர் பேசுதல், தமிழ் நாகரிக மரபன்று என்பதறிக. அதுவும் அவர்களை ஏழையாக்கியவர்களே கூறுதல் அறமன்று. வாங்குவோனின் ஏழைமையைப் பிறர் அறியக்கூறாமல் கொடுத்தல் என்றும் பொருள் கொள்ளலாம். ஏற்பவனுக்குக் கொடுக்கும் குண நிலையில், பொருளால் இல்லையானாலும் குணத்தால் உயர்ந்திருப்பவர்கள் தம் வறுமையைக் கூறாமல் கொடுப்பர் என்றும் பொருள் கொள்ளலாம். ஏற்பான் மீண்டும் தனது வறுமையைப் பிறிதோரிடத்தில் சென்று கூறி இரவாவண்ணம் அவன் வறுமை தீரக் கொடுத்தல் என்றும் பொருள் கொள்ளலாம். 223. 224. இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகம் காணும் அளவு. இரத்தல்மட்டும் துன்பமன்று இரக்கப்படுதலும் குடிப்பிறந்தாருக்குத் துன்பமே. எப்படி? இரப்போனின் துன்பம் நீங்கப்பெற்று இன்முகம் காணும் அளவுக்குக் கொடுக்க வேண்டும் என்ற கோட்பாடுடையராதலின் இரக்கப்படுதலும் துன்பமேயாம். இரப்போரின் வறுமை மிகுதியும், ஈவோரின் பொருள்களும் ஒத்து வராத போது, அறம் நோக்கி வருந்துதலின் இரக்கப்படுதலும் துன்பம் என்றார். 224. 225. ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். 熔 தவம் செய்வோரின் ஆற்றல் தமது பசியைப் பொறுத்துக் கொள்வதில் இருக்கிறது. இந்த ஆற்றல் பசித்துன்பத்தைஈகையால் மாற்றுவார் ஆற்றலின் பின்னே வைத்து எண்ணப்படும். அதாவது, பசியைப் பொறுத்தலிலும் பசியை மாற்றுவார் ஆற்றல் சிறப்புடையது. பசியைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றல் என்பது பழக்கத்தினால் கூட எளிதாக அமையும். ஆனால், அறிவறிந்த ஆள்வினையால் பொருளீட்டி 66 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை