பக்கம்:திருக்குறள் உரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் உலகத்தில் ஒருவரைப் பலர் கேட்க - கற்க உரைக்கும் தகுதி பெற்றோர் சொல்வதெல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு அவர் வேண்டியதொன்றை ஈவார் மேல் நிற்கும் புகழே. 232. 233. ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன்று இல். தனக்கு இணை இல்லாது உயர்ந்த புகழல்லாமல் இவ்வுலகத்தில் அழியாது நிற்பது வேறொன்றுமில்லை. 233. 234. நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு. ஒருவண் நிலவுலகத்தில் நிலையான புகழைச் செய்வானாயின் தேவருலகம் அறிவால் சிறந்தவரை விரும்பாது. அறிவுடையோரினும் மனித உலகத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளை இயற்றுவோர் விரும்பத்தக்கவர் என்பது கருத்து. 234. 235. நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது. வளர்ச்சி போலக் காட்டிக் கேட்டினை அடைதலும் வாழும் நிலையிலேயே இறத்தலை அடைதலும் திறப்பாடுடையவர்க்கேயாம். செல்வத்தை வளர்த்தல்போல் காட்டி அறத்தில் ஈட்டிய செல்வத்தை அழித்தலும் இறந்தாலும் இருக்கும் நிலையிலேயே புகழுடம்பில் வாழ்தலும் அரிய பயிற்சியுடையார்க்கே கூடும். செல்வக்கேடு போல் காட்டி செல்வத்தை அறம் செய்தல் மூலம் ஈட்டலும் இறந்தும் இருப்பது போல் புகழுடம்பில் வாழ்தலும் என்றும் கூறலாம். 235. 236. தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. பலர்முன் தோன்றும்பொழுது புகழொடு தோன்றுக. அங்ங்ணம் தோன்ற இயலாதாயின் பலர்முன் தோன்றாதிருத்தலே நன்று. புகழொடு தோன்றுதலாவது புகழினைப் பெறுதற்குரிய தகுதிகளோடு தோன்றுக என்பது கருத்து. காரணம் காரியமாகக் கூறப் பெற்றது. 236. 237. புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன். தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 69