பக்கம்:திருக்குறள் உரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் தமக்குப் புகழுண்டாக வாழாதவர். தம்மை இகழும்பொழுது புகழ்பட வாழாத தம்மையே நொந்து கொள்ளாது இகழ்வாரை நொந்து கொள்வது ஏன்? எல்லாரும் புகழை விரும்புவர். ஆயினும் புகழ்பட வாழ விரும்பார் என்பது உலகியல். 237. 238. வசைஎன்ப வையத்தார்க்கு எல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின். ஒருவன் தனது புகழை நிலை நிறுத்தாவிடின் அது உலகத்தார்க்கு எல்லாம் பழிப்பாகும். பழிப்புக்குரியவற்றை நீக்குதல் மூலம் புகழ் அடைதல் வாழ்க்கை முறை. புகழ் பெறாதிருத்தல் வையகத்திற்கு வசைநிலையாயிற்று என்பது கருத்து. 238. , 239. வசைஇலா வண்பயன் குன்றும் இசைஇலா யாக்கை பொறுத்த நிலம். புகழைச் செய்யாத உடம்பைச் சுமந்த நிலத்தில் பழிப்பில்லாத விளைச்சல் குறையும். அறிவுடன் கூடிய உழைப்பின் வழி பொருள் ஈட்டலே புகழுக்கு வாயில். இத்தகு உழைப்பில்லாதவர்கள் வாழ்வதால் நிலம் விளைச்சல் குறைகிறது என்பது கருத்து. 239, 240. வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர். பழியில்லாமல் வாழ்பவரே உயிர் வாழ்பவர். புகழின்றி வாழ்பவர் உண்மையில் வாழாதவரேயாம். வாழாமையும், வாழ்தலும் புகழில் அமைந்து கிடக்கிறது. 240. 25. அருள் உடைமை e சார்பும் குறியெதிர்ப்பும் இல்லாது எல்லா உயிர்கள் மாட்டும் அன்புகாட்டுதல் அருளுடைமையாகும். துறவிகளுக்குச் சார்பும் குறியெதிர்ப்பும் இருக்காது. ஆதலால், அவர்கள் காட்டும் அன்பு அருளுடைமையாயிற்று. 70 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை