பக்கம்:திருக்குறள் உரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 241. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள. செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்தது அருட்செல்வம். மற்ற பொருள் முதலிய செல்வங்கள் கீழ் மக்களிடத்தும் உள்ளன. அருட்செல்வம் உயர்ந்தோரிடத்திலேயே இருக்கும் என்பது கருத்து. 241. 242. நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை. நல்ல முறையில் நாடி ஆராய்ந்து அருளாக்கத்தினை உடையவராக விளங்குக. பல்வேறு முறைகளால் ஆராய்ந்தாலும் உயிர்க்குத் துணையாவது அருளே, பிறிதொன்றும் இல்லை. 242. 243. அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேரந்த இன்னா உலகம் புகல். இருள்செறிந்த துன்ப உலகம் புகுதல் இது என்று சுட்டிக் காட்டப்பட்டதாய்ப் பொறி புலன்களைக் கடந்து கிடப்பது. இதனைத் துணிந்து ஏற்பார் இன்று இல்லை. ஆயினும் “துன்ப உலகம்” என்றே கூறினார். இந்த உலகிலேயே கூட அறியாமை, வறுமை, பிணி, பகை முதலியவற்றால் வருந்தித் துன்புற்றுவாழ்தலும் நரகம் என்று எண்ணினாலும் தவறில்லை. 243. 244. மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை. நிலையான உயிர்களைப் பேணி அந்த உயிர்களிடத்தில் அருளுணர்வைக் காட்டுவானுக்குத் தன் உயிருக்காக அஞ்சும் தீவினை இல்லை. போட்ட வித்தே முளைக்கும். பிறிதொன்று முளைக்காது. அதுபோலச் செய்தனவே அனுபவத்திற்குரியன. மற்ற உயிர்களுக்கு அருள் காட்டுபவன் அதனையே திரும்பப் பெறுவான். “மன்னுயிர்' என்பதற்குப் பிற உயிர் என்று பொருள் கொள்ளலும் தவறாகாது. 244. 245. அல்லல் அருள்.ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 71