பக்கம்:திருக்குறள் உரை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 250. வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து. தன்னின் வலியார் தன்னைத் துன்புறுத்தும் பொழுது தான் நிற்கும் நிலையை எண்ணுக, தான் மெலியார் மீது தாக்குதல் செய்யும் பொழுது. தாம் அஞ்சுவதைப் பிறரிடம் செய்யற்க என்பது கருத்து. 250. 26.புலால் மறுத்தல் உயிர்க் கொலையால் வரும் உணர்வைத் தவிர்த்தல். புலால் உணவு அன்புக்கு மாறானது. ஆதலால், புலாலைத் தவிர்த்தல் அறம். இன்று புலால் உணவு என்றால் விலங்குகள், பறவைகள் முதலியவற்றின் இறைச்சியை மட்டுமே தவிர்க்கும்படி கூறுகின்றனர். தாவரங்களைத் தவிர்ப்பதில்லை. ஏன்? தாவரங்களுக்கு உயிருண்டு என்பதுதானே இலக்கணம். ஆம்! தாவரங்களுக்கு உயிருண்டு. எத்தகைய உயிர் தாவரங்களுக்கு? மனிதர் தாவர விதைகளைத் தண்ணீரோடும் மண்ணோடும் பொருத்தினாலே உயிர் தோன்றும்; தாமாகத் தோன்றா. தாவரங்களுக்குக் காதற் பசியும் காதல் சேர்க்கையும் கிடையாது; கூட்டு உண்டு. ஆனால், தேடிப்போய் அல்ல. மற்ற உயிர்கள் மூலம் சேர்க்கை உண்டு. ஆதலால், தாவரங்களை உண்ணுதல் புலால் ஆகாது. மேலும், உயிர்த்தாதுக்கள்இல்லாத தாவரங்களை உண்ணுதலையே தவம் என்று கூறுவோரும் உண்டு. அருளுடையார் புலால் உண்ணமாட்டார் என்பதால் அருளுடைமையின் பின் வைக்கப் பெற்றது. 251. தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான் எங்ங்னம் ஆளும் அருள். தன் உடம்பு பெருத்து வளர்வதற்காகப் பிறிதோருயிரின் உடம்பினைத் தின்பவன் எப்படி அருளுணர்வுடையவனாக இருப்பான்? புலால் உணவு உண்பார்க்கு அருளுடைமை இல்லை என்பது கருத்து. பிற உயிர்நலம் மறுத்த தன்னலம் அருளுடைமைக்குப் பகை என்பதுமாம். 251. 252. பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. பொருளால் பயண் கொள்ளல் அதனைப் பாதுகாத்துக் கொள்ளாதவர்க்கு இல்லை. அதுபோல அருளால், பயன் கொள்ளல் புலால் உண்பவர்க்கு இல்லை. 252. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 73