பக்கம்:திருக்குறள் உரை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் உடலுக்கு வந்த நோயினை நொந்து வருந்தாது தாங்கிக் கொள்ளுதல், மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமை இவையே தவத்திற்குரிய பண்பியல் வடிவம். தற்சார்பான விருப்பமின்மையால் துண்பத்தைத் தாங்கிக் கொள்ளுதலும், மற்ற உயிர்களின் மீது வெறுப்பின்மையால் துண்யம் செய்யாமையும் கைகூடும். 261. 262. தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை அஃதுஇலார் மேற்கொள் வது. தவம், தவநெறியினை உரிமையாகக் கொண்டவர்களுக்கே ஆகும். அங்ங்ணம் தவநெறி உணர்வின்றிப் பிற காரணங்களால் தவத்தினை மேற்கொள்வது மாறான பலனையே தரும். அதாவது தவம் நிறைவேறாது. இங்கு 'உரிமை' என்றது விருப்பத்துடன் மேற்கொள்ளும் ஒழுகலாறு, பிற காரணங்கள் என்று குறிப்பிட்டது, வறுமை, உறவில் பொருத்தப்பாடிண்மை, பொருளீட்டும் வேட்கை, இன்ன பிற காரணங்களுக்காகத் தவத்தை மேற்கொள்வது. 262. ~ 263. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றைய வர்கள் தவம். துறவிகளுக்கு உண்டி முதலியன வழங்கித் தவத்தில் நிறுத்துவதற்காகவே மற்றவர்கள் தவத்தை மறந்துவிட்டனர் போலும்! பொருள் செய்யும் முயற்சியில் ஈடுபட்டால் தவத்தில் குறை நேரிடினும் நேரிடலாம். அல்லது தவப்பயிற்சிக்குரிய காலம் போதிய அளவு கிடையாமல் போகலாம். அதுமட்டுமன்று. பொருளை விரும்பி ஈட்ட முயற்சி செய்தால் ஒரோவழி பற்றுள்ளம் மிகுந்து தவத்திற்கு இடையூறு ஏற்படலாம். அதனால் தவம் செய்வார் பொருள் செய்யும் முயற்சியில் ஈடுபடுவதில்லை. தவம் செய்வோர்க்கு உரிய வாழ்க்கைத் தேவைகளைத் தவம் மேற்கொள்ளாதவர்கள் வழங்குவர். இங்ங்ணம் வழங்குவோர் தவம் செய்வோர்க்குத் துணை செய்வதால் தவத்தை மறந்தனர் போலும் எண்பது கருத்து. "மற்றையவர் என்பதற்கு இல்லறத்தார் என்று உரை காண்பார் உண்டு. இல்லறத்தில் தவமில்லை என்பது தமிழ்மரபுக்குப் பொருந்தாது.263. 264. ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும். பகை செய்வாரைக் கெடுத்தலும் தமக்கு உவப்புடையார்க்கு ஆக்கமளித்தலும் தவத்தால் கைகூடும். 76 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை