பக்கம்:திருக்குறள் உரை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் பகைவரைக் கெடுத்தல், வேண்டியார்க்கு ஆக்கம் தருதல் ஆகியன தவமுடையார் எண்ணிய அளவிலேயே செய்ய இயலும். ஆயினும், உண்மைத் தவமுடையார் இதனைச் செய்யார். ஒரோவழி செய்யின் தவம் கெடும்.264. 265. வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும். தவமுடையார் தாம் வேண்டியவற்றை வேண்டியபடியே அடைதலால் தவம் செய்யும் முயற்சி இப்பொழுதே மேற்கொள்ளப்படும். வேண்டிச் செய்யப்படுவது தவமன்று; இங்கு, வேண்டிய வேண்டியாங்கு எய்தல் என்றது உயிர் இன்ப அன்பில் திளைத்தலேயாம். "ஈண்டு முயலப்படும்’ என்றது காலந்தாழ்த்தாது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காம். 265. 266. தவம்செய்வார் தம்கருமம் செய்வார் மற்றல்லார் அவம்செய்வார் ஆசையுள் பட்டு. தவம் செய்பவர்கள் தாம் மேற்கொண்ட தவத்திற்குரிய கடமையைச் செய்பவர்கள். அங்ங்ணமில்லாதார் கடமையைச் செய்யாது தவம் செய்வார் போலக் காட்டி மாறுபட்டனவற்றைச் செய்து ஆசை வழிபட்டுக் கேடு செய்பவராவார். தவம் செய்வாருக்குரிய கடமையாவது மகவெனப் பல்லுயிரும் ஒக்கப் பார்த்துச் செந்தண்மை பூண்டு ஒழுகுதல். தவத்திற்கு மாறுபட்ட செயல்களாவன: சாதிகளை வளர்த்தல், மதப் பிணக்குகளை வளர்த்தல், காசுக்கு மந்திரத்தை விற்றல் முதலியன.266. 267. சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. பொண் சுடச்சுட ஒளிவிடும். அதுபோலத் தவநெறி மேற்கொண்டோருக்கு ஏற்படும் துன்பம், தவத்தின் ஆற்றலை - ஒளியை வளர்க்கும். துன்பம், தவமுடையாரை மேலும் தவத்தில் ஈடுபடுத்தும். துன்பத்தில் துவள்பவர் தவத்திற்குரியவரல்லர். 267. 268. தன்.உயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும். உயிரின் இயற்கை முனைப்பாகிய தான் என்ற உணர்வு அற்ற தவமுடையாரை மற்ற உயிர்களெல்லாம் தொழும். தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 77