பக்கம்:திருக்குறள் உரை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் 'தாண் அறப்பெற்றவர்களே மற்றவர்களால் மதிக்கப்படுவர்; வணங்கப்படுவர். 268. 269. கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. தவத்தின் ஆற்றல் கைவரப் பெற்றவர்களுக்கு, காலனை எதிர்த்து வெற்றி பெறுதலும் கைகூடும். தவமுடையார்க்கு மரணபயம் இல்லை என்பது கருத்து. 269. 270. இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர்பலர்நோலா தவர். தவம் செய்பவர்கள் உலகத்தில் சிலராயினர். அதன் காரணமாக இலர் பலராயினர். நோற்பார் பலராக இல்லை. இங்கு நோற்பார் என்பதற்கு தனக்கென முயலா நோண்றாள் பிறர்க்கென முயலுநர் என்ற புறப்பாடல் வழிப்பொருள் கொள்ளுதல் மரபு. மற்றவர்கள் வாழ வேண்டும் என்ற நல்லெண்ணத்தவம் செய்வோர் இன்று அருகிப் போயினர். தவமுடையார் போலத் திரிபவர்கள் காணிக்கைகளைச் சுருட்டுகின்றனர். அதனால் சிலர் பலராயினர். 270. 28. கூடாவொழுக்கம் தவத்தின் இயல்பாகிய அருளுடைமைக்குப் பொருந்தாத ஒழுக்கத்தினை மேற்கொள்ளுதல் கூடாது. அன்பும் அருளுமுடையோராக மகவெனப் பல்லுயிரும் ஒக்க நோக்கிச் செந்தண்மை கொண்டு ஒழுகுதலுக்கு மாறாக, காமஇன்பம், தன்னலம் மற்றும் துய்ப்புகளால் தூண்டப்பட்டு மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்து அவ்வழி துய்த்தல் ஆகாதாம். 274. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். பிறரை வஞ்சிக்கும் மனமுடையவர்களின் பொய்யொழுக்கத்தைக் கண்டு உடலினுள் கலந்திருக்கும் ஐம்பூதங்களும் சிரிக்கும். உள்ளே வெறுப்பையும் பகையையும் வைத்து அன்பும் அருளுடையார் போல நடந்தால் உள்ளிருக்கும் வெறுப்பையும் பகையையும் தாங்கமாட்டாது உடல் நலம் கெட்டுப் போதலால் ஐம்பூதங்களும் நகும் என்றார். 271.