பக்கம்:திருக்குறள் உரை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 272. வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம் தான்.அறி குற்றப் படின். தம் நெஞ்சம் தவறு என்று உணர்த்தி அறிந்த குற்றத்தைச் செய்வதற்கு, வானத்தில் உயர்ந்த திருவேடப் பொலிவு என்ன செய்யும்? தோற்றத்திலும் நடத்தல் தகுதி என்பது வலியுறுத்தப்பெற்றது.272. 273. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. வலிமையில்லாத பசு, புலியின் தோலைப் போர்த்துக் கொண்டு மேய்தலைப் போன்றது தவத்தின் கோலத்தில் மக்களின் உடைமைகளைச் சுரண்டிச் சேர்த்தல். தவக்கோலம் மக்களைக் கவரும் தன்மையது. இக்கோலம் கொண்டு காணிக்கைகளைச் சேர்த்தல் குற்றம் என்று கூறப்பெற்றது. 273. 274. தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. தவத்தின் கோலம் கொண்டு தவத்திற்குரியன அல்லாத கொடிய செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து நின்று பறவைகளை வீழ்த்தும் வேடனின் செயலை ஒக்கும். 274 275. பற்றுஅற்றேம் என்பார் படிற்றெழுக்கம் எற்றுஎற்றுஎன்று ஏதம் பலவும் தரும். பற்றுவிட்டவர்கள் என்பவர்களின் பொய்ம்மை ஒழுக்கம் எண் செய்தோம்; எண்செய்தோம்’ என்று ஏக்கமுறக் கூடியதுன்பம் பலவும் தரும். “என் செய்தோம்; எள் செய்தோம்” என்று எண்ணிமக்கள் இரக்கமுறத் தக்க துன்பம் பலவும் தரும். 275. 276. நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல். நெஞ்சில் துறவின்றித் துறந்தார் போல் வஞ்சித்து வாழ்பவர்களை விட வன்கண்மையுடையார் யாரும் இல்லை. நெஞ்சில் துறவாதவர்கள் பொருள் கருதியே ஒழுகுவர். இத்தகையோரால் யாதொரு நன்மையும் இல்லாதது மட்டுமின்றி இழிவும் இழப்பும் ஏற்படுவதால் 'வன்கணாளர் ” என்றார். 276. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 79