பக்கம்:திருக்குறள் உரை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 29. கள்ளாமை பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ளுதல், துறவுக்கோலத்தாலும் மந்திரங்கள் உச்சரிப்பதாலும் நன்மை அல்லது தீமை செய்ய இயலும் என்ற மனப்பான்மையைத் தம்மை அணுகுவாரிடத்தில் உண்டாக்கியும் அவர்களின் அறிவின்மையாலும் அவலங்களாலும் பாதிக்கப்பெற்ற நிலையில் பொருள்களைக் காணிக்கை என்ற பெயரில் கவர்தலும் கள்ளத்தனமாகக் கவர்தலோடு ஒக்கும். நடக்கக் கூடாதவைகள் நடக்கும் என்ற நம்பிக்கையை உண்டாக்கிப் பொருள்களைப் பெறுதல் களவாகும். 281. எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. மற்றவர்களால் இகழப்படாது வாழ விரும்புவர் மற்றவர்க்குரிய பொருள் யாதொன்றையும் வஞ்சித்துக் கொள்ளக் கருதற்க. துறவியின் இயல்புகள் அமையாத நிலையில் துறவுக் கோலம் கொள்ளுதல் கூடக் களவுதான். இத்தகு முரண்பாடுகள் மற்றவரால் பழிக்கப்படும். 281. 282. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல். மற்றவர் பொருளை வஞ்சித்துக் கொள்ள உள்ளத்தால் நினைத்தாலும் தீதே. நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் என்பதனால் “உள்ளலும் தீதே' என்றார். 282. 283. களவினால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து ஆவது போலக் கெடும். களவுகளால் பெருகி வளர்ந்த செல்வம் அளவுக்கும் மேலாக வளர்வது போல வளர்ந்து கெடும் பொழுதும் எல்லைகளைக் கடந்து கெட்டுவிடும். உழைப்பால் வராத செல்வம் களவில் கொண்டது போலவேயாகும். இச்செல்வம் பிறிதொருவர் உழைப்பைக் களவாடியதன்றோ? செல்வ உரிமைக்கு உழைப்பே காரணமாய் அமைதல் வேண்டும். வஞ்சித்துக் கொண்ட பொருள் ஆதலால் வஞ்சிக்கப்பட்டோர் வலிமையுடையராகும்போது கெடுதல் இயற்கையின்பாற்பட்ட வரலாற்று நியதி. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 81