பக்கம்:திருக்குறள் உரை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் அளவிறந்து கெடுதலாவது துய்ப்பன முதலியனவும் இல்லாத நிலையினராதல் ஆக்கத்திற்குரிய ஊக்கமும் இழந்து பொருளாகிய அறத்தினையும் இழந்து வஞ்சித்தலால் வந்த பாவத்தினையும் அடைந்து துன்புறுதலால் அளவிறந்து கெடும் என்றார். 283. 284. களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வியா விழுமம் தரும். பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ளக் கருதிய வேட்கை, இனிது போலத் தோன்றிப் பின் தொலையாத துன்பத்தைத் தரும். எதுவும் பழக்கத்தின் பாற்பட்டது. களவு பழக்கமாகிவிடின் உழைப்பும் ஊக்கமும் வாரா. வஞ்சிக்கப்படுவோர் தொடர்ந்து ஏமாளிகளாக இருப்பதற்கில்லை. ஆதலால், விளைவு துன்பமாய் அமையும் என்பது கருத்து. 284 285. அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். பிறர் பொருளைக் கவர அவர்தம் சோர்வு கருதிக் காத்திருப்பாரிடம் அருளாக்கம் கருதி அன்புகொண்டொழுகும் வாழ்க்கையைக் காணல் அரிது. புண்ணியம், புகழ், பெருமை கருதிச் சோர்வுபடுதல் "பொச்சாப்பாகும்'. 285. 286. அளவின்கண் நின்றுஒழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர். களவிண்கண் ஆகும் ஆக்கத்தை விரும்பியவர்கள் தமக்குரிய அளவின்கண்ணும் நின்று ஒழுகார் அதாவது, தமக்குரிய எல்லைகளில் நின்று ஒழுகுதல் அளவின்கண் நின்று ஒழுகுதலாகும். 286. 287. களவுஎன்னும் காரறி வாண்மை அளவுஎன்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல், ಹಣ್ಣು என்று சொல்லப்பெறும் இருள்தன்மையொத்த அறியாமை தன் நிலையில் நின்று ஒழுகும் ஆற்றலுடையாரிடம் இல்லை.

  1. நாள்தோறும், தாம் கொண்ட குறிக்கோளுக்கிசைந்த நிலையில் உயிர் வளர்கிறதா என்பதை ஆய்வு செய்து தரத்தினை அளந்து வாழ்தல் வாழும் திறனாகும். 287

82 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை