பக்கம்:திருக்குறள் உரை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் ஒருவனுக்கு , “பொய் சொல்லான் ' என்ற புகழே புகழ், அதனினும் சிறந்த புகழ் வேறு இல்லை. பொய்யாமை எல்லா அறத்தினையும் தரும். 'பொய்யாமை' என்ற அறந்தழுவிய வாழ்க்கையிலேயே எவ்வுயிர்க்கும் திங்கு செய்யாமையாகிய பல்வேறு அறங்களும் பொருந்துவதால் இதுவே புகழாயிற்று. எவ்வுயிர்க்கும் 啦 தீமை செய்யாமையிலேயே பொய்யாமை வளர்வதால் அறமும் அடங்கியவாறு உணர்த்தியது. 296. 29. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று. ஒருவண் பொய்யாமை என்ற ஒழுக்கத்தினின்றும் வழுவாது பொய்க்காது வாழ்க்கை நிகழ்த்துவானாயின் அதுவே அறமாகும். இவன் பிற அறங்களைச் செய்யாதிருந்தாலும் நன்றாம். பொய்யாமை என்பது அறங்கள் பலவற்றின் மையம்.பொய்யாமையில் உறுதியாக இருந்தால் பல்வேறு அறங்கள் தாமே உடனிகழ்வதாக நிகழும்; செய்ய வேண்டும் என்பதில்லை. 297, 238. புறம்துய்மை நீரான் அமையும் அகம்தூய்மை வாய்மையால் காணப் படும். புறந்துய்மை அழுக்கு நீக்குதல், அகந்துாய்மை குற்றம் நீங்குதல். குற்றம் நீங்கிய வாழ்க்கை காணப்படுதல் என்று கூறியதென்னின் உயிர்களின் வாழ்க்கை, இடையூறின்றிநிகழ்தலைக் கொண்டு காண்பதாகும். புறந்துய்மை வாழ்வியலின் இருபிரிவினர்க்கும் தேவையே. துறவியர்க்கு அகந்தூய்மையே சிறப்பு. 298. 299. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. செந்தண்மை பூண்டொழுகும் அறவோர்க்குப் புறணிருள் நீக்கும் விளக்குகள் விளக்கல்ல. அகனிருள் நீக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்காகும். - புறத்தே காணப்பெறும் தடங்களைக் கொண்டே சான்றோர்கள் முடிவெடுக்க மாட்டார்கள். அவர்களுக்கு உண்மையறியும் விளக்கு வாய்மையேயாம், 299, 300. யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற. 86 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை