பக்கம்:திருக்குறள் உரை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் யான் உண்மையான அறங்களாய்க் கண்டவற்றுள் எவ்வகையிலும் வாய்மையைப் போலச் சிறந்த அறம் வேறு இல்லை. இது திருவள்ளுவர் வியந்து சிறப்பித்துக் கூறும் திருக்குறள். எல்லா அறங்களிலும் வாய்மையே சிறந்தது. வாய்மை நீங்கிய மற்ற அறங்களில் குற்றங்குறைகள் இருக்கின்றன. வாய்மை யாதொரு குற்றமும் குறையும் இருத்தல் இயலாது. வாய்மை முற்றாக நண்மை. அதனால் அறங்கள் பலவற்றிலுள்ளும் சிறந்தது வாய்மை. 300. 31.வெகுளாமை வெகுளி-அழுக்காறு. அவா,பொய் இவற்றின் காரணமாகப் பிறப்பது. அழுக்காறு அவா, பொய், இவற்றிற்குக் காரணம் உடைமை, அதிகாரம், புகழ் முதலியன. இம்மூன்றினையும் துறத்ததே துறவு. இதனால் வாய்மை துறவின் ஒரு பகுதியாகும். இன்றைய துறவுமுறை துறக்க வேண்டியன துறவாமையும் துறக்க வேண்டாதன துறத்தலுமாக மாறுபட்டு இருக்கின்றது. ஒருவன் மீது சினம் கொள்ளுவதற்குரிய காரணங்கள் இருப்பினும் சினங்கொள்ளுதலைத் தவிர்த்தல் வாய்மையுடையோர் வெகுளல் செய்யார். 301. செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக் காக்கின்என் காவாக்கால் என். சினங் காக்கக்கூடிய எளிய இடத்தில் சினத்தைக் காட்டாது, அருளால் தடுத்துக் கொள்பவனே சினத்தைத் தடுத்துக் கொள்பவன் ஆவான். அங்ங்ணம் இல்லாது வலிமையான இடத்தில் சினம் வராது காத்துக் கொண்டால் என்ன? சினத்தைக் காக்காவிடில் தான் என்ன? வலிய இடத்தில் காட்டப் பெறும் சினத்தால் சினம் காட்டுபவருக்குக் கேடு உண்டாகும். ஆதலால் சினம் உரியவர் முயற்சியின்றியே அடங்கும். அதனால் சினம் காத்தல் என்னும் தன் முயற்சி இல்லை. 301. 302. செல்லா இடத்துச் சினம்தீது செல்இடத்தும் இல்அதனின் தீய பிற. ஒருவனது சினம் அது தாக்க முடியாதவர்மேல் எழுமாயின் தனக்கே தீங்காம். சினம் தாக்கக்கூடிய இடத்தில் எழுமாயினும் தீமையைத் தவிர வேறில்லை. - செல்லிடத்துச் சினம் காட்டலால் இம்மையும், மறுமையும் துன்பம் விளையும்; பெருமையும் குன்றும். 302. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 87