பக்கம்:திருக்குறள் உரை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் சினத்தைத் தனது ஆற்றலுணர்த்தும் சிறந்த பண்பெண்று பொருட்படுத்தின், அதைக் கொண்டவன் கெடுதல், நிலத்தின்கண் அறைந்தவனுடைய கை தப்பாது நோவுறுதல் போன்றது. சினத்தினைக் காட்டி மற்றவர்க்குத் தொல்லை தருதல் பெருமை என்று கருதுதல் வளர்ச்சியில்லாத உலகியல் வழக்கு. 307. 308. இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று. கொத்தான நாவுகளுள்ள பெருந்தி வந்து சுட்டாற் போன்ற தீங்குகளை ஒருவன் தொடர்ந்து செய்தானாயினும் இயலுமாயின் அவனைச் சினவாமை நன்றாம். எரியும் நெருப்பைவிடச் சினத்தீ கொடிது என்றவாறு, எரியும் நெருப்பு புறப்பொருளை மட்டுமே அழிக்கும். சினத்தி பொருள்களையும் பண்புகளையும் ஒருசேர அழிப்பது. கொடிய துன்பத்தை அனுபவக்கும் நிலையில் சினத்தைத் தவிர்த்தல் எளிதில் கைகூடாது. முடிந்தால் அதனில் சிறப்பு வேறு ஒன்றும் இல்லை.308. 309. உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். தவம் செய்கிறவன் தன் மனத்தால் சினத்தை ஒருபோதும் கருதாதிருப்பான் எனின், அவன் பெறற்கரிய பேற்றையெல்லாம் ஒருங்கே பெறுவான். புறத்தே சினம் காட்டதவர்களும் கூட உள்ளத்தில் சினத்தைக் கொள்ளுதல் கூடும் என்பது கருத்து. உள்ளத்தில் சினம் இருந்தாலும் உறவுகளில் செழிப்பு இருக்காது. இதனால் யாரிடமிருந்தும் உதவி பெறமுடியாது. மேலும் உள்ளத்தில் சினமிருப்பின் புழுக்கமும் உறுத்தலுமிருக்கும்.முயற்சிகளின் முனைப்பும் மழுங்கும். அதனால் நினைத்ததை அடைதல் அரிது என்ற கருத்தை விளக்க உள்ளத்திலும் சினம் கொள்ளாதவர்கள் நினைத்ததெல்லாம் அடைவர் என்றார். - 309. 30. இறந்தார். இறந்தார் அனையர் சினத்தைத் துறநதார துறநதார துணை. எல்லைகளைக் கடந்த சினத்தைக் கொண்டவர்கள் உயிரோடிருக்கினும் செத்தவரை ஒப்பர். சினத்தினை முற்றாகத் துறந்தவர்கள் முற்றத் துறந்தவர்களாவர். * பொன்,பொருள்,பூவையர், புகழ் முதலிய பற்றுக்களே சினத்திற்குக் தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 89