பக்கம்:திருக்குறள் உரை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் காரணமாதலால், சினத்தினைத் துறந்தார் என்பது சினத்திற்குக் காரணமான பற்றுக்களையும் துறந்தார் என்பது உய்த்தறியக் கூடியது. 310. 32.இனினா செய்யாமை இன்னா செய்யாமையாவது யாரொருவருக்கும் யாதொரு தீங்கும் செய்யாது வாழ்தல். பிணக்கு, வெகுளி, பகை காரணமாகவும் அழுக்காறு, அவா காரணமாகவும் புகழ் வேட்கை காரணமாகவும் நெறிகடந்த இன்ப நுகர்வுகாரணமாகவும் தீங்கு செய்யும் இயல்பு தோன்றும் எந்த உயிருக்கும் எந்த ஒரு தீங்கையும் செய்யக்கூடாது என்பதே திருக்குறளின் அறம். அதுவும் தான் இன்னாது என உணர்ந்த துன்பத்தைப் பிறிதோர் உயிர்க்குச் செய்யக்கூடாது என்பது தெளிவு. 311. சிறப்புஈனும் செல்வம்பெறினும் பிறர்க்கு இன்னா செய்யாமை மாசற்றார் கோள். சிறப்பைத் தரும் பெருஞ்செல்வம் பெறக்கூடுமாயினும் பிறர்க்குத் தீங்கு செய்யாதிருப்பதே குற்றமற்றவர்களின் குறிக்கோள். பெருஞ்செல்வம் பெறினும் பிறர்க்குத் தீமை செய்தல் வழி நெடிய பகையும் அமைதியின்மையும் தோன்றி.செல்வத்தின் பயனாகிய துய்ப்புமின்றிச் செல்வத்தை இழக்கவும் நேரிடும். 31 1, 32. கறுத்து இன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா செய்யாமை மாசற்றார் கோள். ஒருவன் தன் மேல் கறுவு கொண்டு தீயவை செய்தாலும் அதற்குத் திருப்பி அவனுக்குத் தீமையைச் செய்யாதிருத்தல் குற்றமற்றவர்களின் கொள்கையாகும். -- பழிவாங்குதல் தொடருமெனில் ஒருமுடிவே இல்லாமல் அழிவே ஏற்படும் எண்பதால் குற்றமற்றவர்கள் பழிவாங்குதலை விரும்ப மாட்டார்கள். 312. 33. செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமம் தரும். šk தான் ஒரு தீங்கும் செய்யாதிருக்கவும் தன்மேற் பகைமை கொண்டு தீங்கு செய்தவர்க்கும் பழிவாங்கும் உணர்வில் தீங்கு செய்தல் தப்பமுடியாத துனபததைத் தரும். 90 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை