பக்கம்:திருக்குறள் உரை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஒருவர் யாதொரு தீங்கும்செய்யாதிருக்கத் தீமை செய்வதற்குக் காரணம் அழுக்காறு, அச்சம் முதலிய தீய இயல்புகளின் வழிப்படுதலேயாம். 313. 314. இன்னாசெய் தாரை ஓறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல். தமக்குத் திங்கு செய்தாரைத் தண்டிக்கும் முறையாவது தீமைசெய்தவர் வெட்கப்படும் அளவுக்கு நன்மையைச் செய்வதுடன் அவர் செய்த தீமையையும் தாம் செய்த நன்மையையும் மறந்து விடுதலாகும். பிறர் செய்த தீமையை நினைப்பதால் பகைமை உணர்வும் தாம்செய்த நன்மையை நினைப்பதால் தன்முனைப்பும் துளிர்க்கும்.ஆதலால் மறந்துவிடுக எனறார. உளவியல் அடிப்படையில் ஒருவரைத் திருத்த, உடன்பாட்டு முறையிலே அணுகுதல் வேண்டும். பழிவாங்கும் உணர்வில் நின்ற ஒருவனை “ஒறுத்தல் ' 'நாண’ என்ற சொற்களின்வழி, பழி வாங்குதலுக்கு உடன்பட்டு நிற்பார் போலக் காட்டி அவன் வெகுளியைத் தணிய வைத்துப் பின் நன்னயம் செய்யும் நெறியில் ஆற்றுப்படுத்தும் நிலையில் இக்குறள் அமைந்திருப்பதறிக. 3.14. 315. அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை. பிறிதோருயிர்க்கு வந்த துன்பத்தைத் தம் துன்பம்போல் எண்ணி மாற்றாது போனால் அறிவினால் என்ன பயன்? மற்ற உயிர்களின் துன்பத்தைத் தம் துன்பம் போல் எண்ணி நீக்க முயற்சி செய்யாதவரின் அறிவுடைமை பயனற்றது என்று உணர்த்தியது. 'பிறிதின்’ என்று பொதுப்படக் கூறியதால் ஓரறிவுயிர் முதல் அனைத்துயிர்களையும் என்பதறிக. 3.15. 316. இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல். மக்களுக்குத் தீங்கு தருபவை என்று அறிந்துணர்ந்து கொண்ட தீமைகளைப் பிறரிடத்துச் செய்யாதிருத்தல் வேண்டும். தாம்துன்பம் என்று அறிந்துணர்ந்த தீமையைப் பிறரிடத்தில் செய்தால் அறிந்தும் அறமல்லாதன செய்த குற்றம் வந்து சேரும். 316. 317. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 9t