பக்கம்:திருக்குறள் உரை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் எக்காலத்தும், யாரிடத்தும் பொல்லாதனவற்றை மணமறிந்து செய்யாதிருத்தல் தலையாய அறம். *. 'எனைத்தானும்' என்றதால் எந்தச் சூழ்நிலையிலும் செய்யற்க என்பது கருத்து. “யார்க்கும்” என்றதால் நட்பு- பகை என்ற வேறுபாடு விலக்கியவாறு அறிக மனமறிந்து செய்யும் தீமைகள் திட்டமிட்டுச் செய்த தீமைகள் ஆகியவற்றுக்கு அறநெறியிலும் சரி, ஆட்சியியலிலும் சரி கழுவாய் இல்லை என்பது உணர்த்தியது. 3.17. 318. தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் எண்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல். பிறர் செய்யும் பொல்லாதன, தன் உயிர்க்குத் துன்பம் செய்தமையை அனுபவித்தறிந்தவன், நிலைபெற்று வாழும் இயல்பினையுடைய மற்றவர்க்குப் பொல்லாதன செய்தலுக்கு என்ன காரணம்? துன்பம் என்று அறிந்த ஒன்றை மற்றவர்க்குச் செய்தல் மனித இயல்பிற்கு உரியதன்று என்று திருவள்ளுவர் கருதுவதால் காரணம் கேட்கிறார். . 3.18. 319. பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும். பிறர்க்கு முற்பகல் துன்பம் செய்யின் துன்பம் செய்தவருக்குப் பிற்பகலில் துன்பம் வந்து சேரும். "முற்பகல்' - “பிற்பகல்' என்றது கால விரைவுக் குறிப்புணர்த்து வதற்காக. “தாமே வரும்” என்றதால் துன்பம் செய்யப்பட்டவரே துன்பம் செய்ய வேண்டியதில்லை என்றுணர்த்தியது. தாமே எப்படி துன்பம் வரும் எனின் பிறர்க்குத் துண்பஞ்செய்தவன், அத்திச் செயலின் எதிர்விளைவு எப்படி அமையுமோ என்று அஞ்சுவதன் மூலம் தாமே துன்பத்தை வரவழைத்துக் கொள்ளுதல் உண்டு என்பதை உணர்த்த, . 319, 320.நோய்எல்லாம் நோய்செய்தார்.மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். நோய்கள் எல்லாம் பிறர்க்கு நோய் செய்தவர் மேலே வந்தேறி கொல்லாமையைக் கடைபிடித்து ஒழுகுவோனின் வாழ்நாள் மீது உயிர்களைக் கவரும் காலன் செல்லமாட்டான். குறிப்பு- “வாழ்நாள் மேல் செல்லாது உயிருண்ணுங்கூற்று 326. 92 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை