பக்கம்:திருக்குறள் உரை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 326. கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிர்உண்ணும் கூற்று. கொல்லாமையைக் கடைபிடித்து ஒழுகுவோனின் வாழ்நாள் மீது உயிர்களைக் கவரும் காலன் செல்லமாட்டான். குறிப்பு : “வாழ்நாள் மேல் செல்லாது உயிருண்ணுங்கூற்று' என்றதால் இறப்பே இல்லையெண்பது பொருளன்று. வாழ்நாள் நீடிக்கும் என்பதே கருத்து. புலால் உண்ணாமையினால் மரக்கறி உணவால் ஏற்படும் மன அமைதியும் யாதோர் உயிர்க்கும் தீங்கு செய்யாமையால் பிற உயிர்களின் நல்லெண்ணமும் கிடைப்பதால் வாழ்நாள் நீட்டிக்கும் என்பதறிக. 326. 327. தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை. ஒர் உயிரைக் கொல்லாத நிலையில், தன்னுயிர் நீக்கத்திற்குரிய சூழலே உருவானாலும் பிறிதொன்றன் இனிய உயிரை உடம்பினின்றும் பிரிக்கும் கொலையைச் செய்யற்க. பிற மொழியிலுள்ள அறநூல்கள் "தற்காப்புக்காகச் செய்யப் பெறும் கொலை முதலியன பாவம் அல்ல” என்று கூறுவதை மறுத்தற் பொருட்டுத் தற்காப்புக்காகவும் கொலை செய்தல் கூடாது என்று வள்ளுவம் மறுக்கிறது.327. 328. நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கம் கடை. உயிர்க் கொலையிட்டுச் செய்யும் வேள்வியால் வரும் ஆக்கம் பெரிதேயானாலும் சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் இழிவானதேயாம். 328. 329. கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து. வேள்வி முதலியவற்றில் உயிர்க்கொலை செய்பவர் பகுத்தறிவில்லா மாக்கள். இந்த மாக்கள் உயர்ந்தோராகத் தம்மைக் காட்டிக் கொள்ளினும் அறிவுடையோருக்குப் புலையரே! இதனால், எந்தச் சூழ்நிலையில் எந்த வகை நோக்கம் கருதிச் செய்தாலும் கொலை குற்றமே அயல்வழிநூல்களைப்போலக் கொலையை அறமாக்கும் விதிவிலக்கு திருக்குறளில் இல்லை. 330. உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின் செல்லாத்தி வாழ்க்கை யவர். தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 95