பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

திருக்குறள் கட்டுரைகள்



சான்றாண்மைக்குப் பிற புலவர்கள் தருகின்ற விளக்கத்தைவிட வள்ளுவர் நல்கும் விளக்கம் மாசு அற்றதாகக் காணப்படுகிறது. சான்றாண்மைக்கு மட்டுமல்ல, முத்தியடைவதற்குங்கூட மூன்று வழிகளை விளக்கினார் ஒரு புலவர் அது, “வாயின் அடங்குதல் துப்புரவாம், மாசற்ற செய்கை அடங்குதல் திப்பியமாம், பொய்யின்றி நெஞ்சமடங்குதல் வீடாகும்” என்பது. இதன் பொருள்! “உள்ளத்தால் தீமைதனை ஒரு பொழுதும் எண்ணாதே, வாயால் தீமைதனை ஒரு பொழுதுஞ் சொல்லாதே! உடலால் தீமைதனை ஒரு போதுஞ் செய்யாதே!” என்பதாகும். வள்ளுவர் விளக்கத்தில், ‘தீமை’ என்ற சொல்லுக்கே இடமில்லாது போயிற்று. அவர், ‘கடன் என்ப நல்லவை எல்லாம்’ எனக்கூறிப் போனார். ‘யாருக்கு?’ ‘சான்றாண்மை மேற்கொள்பவர்க்குக் கடன் என்ப நல்லவை எல்லாம்’ என்பது அவரது வாக்கு. இது கேட்போரது உள்ளத்தையும் மிக உயர்த்தி மகிழ்விக்கிறது.

சான்றோரை நமக்குக் காட்டுவது அவரது குணநலனே. பிற நலன்கள் அல்ல. கல்வி, கேள்வி, செல்வம் அழகு, வண்டி, வாகனம், ஆடை அணிகலன், பட்டம், பதவி முதலிய நலன்களையெல்லாம் அடக்கி, அதன்மேல் உயர்ந்து நிற்பது குணநலன் ஒன்றேயாகும். குணநலன் இன்றேல், ஒருவன் சான்றோன் ஆகான். அவன் அடைந்த பிறநலன்களால் அவனுக்குச் சிறப்புச் சிறிதுமில்லை என்பது வள்ளுவருடைய முடிவு.

சான்றாண்மைக்குப் பல நற்குணங்கள் வேண்டும். இன்றேல் ஐந்து குணங்களேனும் வேண்டும். அவை எல்லோரிடத்தும் அன்பாயிருத்தல், பழி பாவங்களுக்கு அஞ்சி வாழ்தல், எவரையும் உற்ற உறவாய்க் கொள்ளுதல். இயன்றவரையில் எளியவர்க்குதவுதல், எப்போதும் உண்மையே பேசி மகிழ்தல் என்பன. இவை ஐந்தையும் துண்களாக நிறுத்தி, மேலே சால்பைப் பரப்பி வள்ளுவர்