பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

திருக்குறள் கட்டுரைகள்


மாவது கண்டாக வேண்டும். ஆனால் கயத்திற்கு அதுவுந்தேவையில்லை. வெள்ளைத்துணியை உடுத்தி, வெறுஞ்சோற்றை உண்பதைக் காண்பதே போதுமானதாம். உடனே குறை கூறத் தொடங்கி விடுமாம். இவ்வுண்மையை, ‘உடுப்பதுவும் உண்பதுவும் காணில்’ என்ற சொற்றொடர் அறிவிக்கின்றது. இதனால் இக்கீழ்களைப் பொறாமைக்காரர்களுக்கும் ‘கீழ் என்று கூறியிருப்பதாகவே கொள்ளவேண்டியிருக்கிறது.

உடுத்திய துணி உடற்புண்ணை மறைப்பதற்காக இருந்தாலும், உண்டது உணவாக இல்லாமல் மருந்தாக இருந்தாலும், அதைக் காணுகின்ற கயவர்கள் அவற்றை உணவும் உடையும் என்றே எண்ணி மனம் பொறுக்கார்களாம். இப்பொருளை இக்குறளிலுள்ள திருக்குறளிலுள்ள “காணின்” என்ற சொல்லே காட்டும். இன்றேல் அஃது “அறியின்” என்று இருந்திருக்கும். இதிலிருந்து இக்கீழ்களை அறியா மைக்கும் ‘கீழ்’ என்று கூறியதாகவே கொள்ளவேண்டியிருக்கிறது!

கொடியவர்கள் தங்கட்குப் பிடிக்காதவர்களிடம் நேரிற் சென்று வைதோ, அடித்தோ, வருத்தித் தமது வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்வார்கள். ஆனால் கயவர்கள் தங்கட்குப் பிடிக்காத மக்களிடம் நேரிற்செல்ல அஞ்சிப் பிறரிடஞ் சென்று குறைகூறிக் கொண்டேயிருப்பார்களாம். இதனால் இக் கீழ்களைக் கொடியர்க்கும் கீழ் என்று கூறியிருப்பதாகவே கொள்ள வேண்டியிருக்கிறது.

கருமித்தனம் வேறு: கயமைத்தனம் வேறு. கருமிகளுக்கு இலக்கணம் “எச்சில் கையாலுங் காகம் ஒட்ட மாட்டார்கள்” என்பதே. ஆனால் கயவர்களோ-உண்டு கழுவிய ஈரக் கையைக்கூட இரப்போர்முன் உதறமாட்களாம். காரணம், உதறினால் கையிலுள்ள தண்ணீர் இரப்போர்முன் சென்றுவிழும் என்பதே. இதனால் இக் கீழ்களைக் கருமிகளுக்கும் ‘கீழ்’ என்று கூறியிருப்பதாகவே