பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கயமை

21


கொள்ளவேண்டியிருக்கிறது. “ஈர்ங்கை விதிரார் கயவர்” என்பது வள்ளுவர் வாக்கு.

கொம்புளதற்கு ஐந்து முழம், குதிரைக்குப் பத்து முழம், யானைக்கு ஆயிரம் முழம் எட்டியிருக்க வேண்டும் என்பது ஒரு புலவரின் கருத்து. “காணின் துன்புறுத்துவர்” என்று இக் குறள் கூறுவதால், ‘கயவர்களின் கண் காணாத் தூரத்திலேயே வாழவேண்டும்’ என்பது வள்ளுவர் கருத்து என்று தெரிகிறது. இதிலிருந்த இக் கீழ்களை விலங்குகளுக்கும் “கீழ்” என்று கூறியிருப்பதாகவே கொள்ளவேண்டியிருக்கிறது.

கயவர்கள் யார்? அவர்கள் எப்படி இருப்பார்கள்? என்பதை நமக்கு விளக்கவந்த வள்ளுவர், அவர்கன் மனிதர்களைப் போலவே இருப்பார்கள் என்று கூறியிருப்பதிலிருந்து, ‘கயவர்கள் மனிதர்கள் அல்லர்’ என்பது வள்ளுவரது முடிந்த முடிவு என்பது நன்கு விளங்குகிறது. காரணம் அவர்கள் உருவத்தால் மக்களாகக் காணப்பட்டாலும், மக்கட்பண்பு அவர்களிடம் காணப்படாமையே யாகும்.

“பழிக்கு அஞ்சி நடக்க வேண்டும்” என்ற கவலையே நெஞ்சத்திலில்லாது வாழ்வதால், கயவர்கள் “புண்ணியர்”களைப் போலவும், ஏவுவார் அடக்குவார் எவருமின்றித் தம் மனம் போனபடியெல்லாஞ் செய்வதால் கயவர்கள் “தேவர்”களைப் போலவுங் காணப்படுவார்கள் என்று, வள்ளுவர் இக்கீழ்களைக் குறிப்பிடுவது நகைச்சுவையிலும் ஒரு புதிய சுவையை உண்டுபண்ணிக் காட்டுகிறது.

“காணின், காண,” என்ற இரு சொற்களும். இக் குறளிலிருந்து ஒரு விரைவைக் காட்டுகின்றன. “கயவர்கள் நலம் கண்டதுமே குறைகாண விரைவார்கள்” என்பது இதன் பொருள். கயவர்களின் விரைவை